நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 24 டிசம்பர், 2015

KANNANAI NINAI MANAME.. PART 45...கண்ணனை நினை மனமே!...பகுதி 45..அஜாமிளன் சரிதம்...

இறை நாமங்களின் பெருமையை, எத்தனை எத்தனையோ விதங்களில் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். நாமம், நாமிக்கு நிகர். இறைவனின் திருநாமமும் இறைவனும் வெவ்வேறல்ல.. கடக்க முடியாத துன்பங்களைக் கடக்க வைக்கும் உத்தம சாதனம் இறைவனின் திருநாமமன்றி வேறில்லை... பகவானின் திருநாமங்களை சதா சர்வ காலமும் சிந்திப்பவர்களுக்கு, இயலாத காரியமென்று ஒன்றில்லை..

KANNANAI NINAI MANAME!.. PART 44...கண்ணனை நினை மனமே!...பகுதி 44... வெவ்வேறு பூகண்டங்களின் ஆராதனை!..(தொடர்ச்சி...).


பாரத வர்ஷத்தில், குறிப்பிடத்தகுந்த பக்தர்களுடன் கூடிய நாரதரால் உபாசிக்கப்படுகிறார் பகவான். நர நாராயண ஸ்வரூபத்தில் அருள் புரியும் எம்பெருமானை, நாரத முனி, யோகத்தாலும் ஞானத்தாலும் பல்வேறு துதிகளாலும் போற்றிப் பணிகிறார். இத்தகைய மகிமையுள்ளவராகவும், சாது ஜனங்களை, பிரளய காலம் வரை காப்பாற்றுபவராகவும் விளங்கும் பகவானை துதிக்கிறார் பட்டத்திரி.

திங்கள், 5 அக்டோபர், 2015

KANNANAI NINAI MANAME.....PART 43....கண்ணனை நினை மனமே!...பகுதி 43... வெவ்வேறு பூகண்டங்களின் ஆராதனை!..(தொடர்ச்சி...).


இளாவ்ருதத்திற்கு மேற்கிலிருப்பது, கேதுமாலம்.இங்கு தம் லீலைகளாலும், புன்முறுவலாலும் சோபிக்கிற அங்கங்களை உடையவரும், ஸ்ரீலக்ஷ்மியாலும், பிரஜாபதி புத்திரர்களாலும் சேவிக்கப்படுகிறவரும், ஸ்ரீலக்ஷ்மியின் மகிழ்வுக்காக மன்மதரூபம் கொண்டவருமான பகவானை தியானிக்கிறார் பட்டத்திரி..

KANNANAI NINAI MANAME... PART 42....கண்ணனை நினை மனமே!...பகுதி 42... வெவ்வேறு பூகண்டங்களின் ஆராதனை!..
இந்தப் பகுதி, (அக்காலத்தில் வழங்கிய‌ )  பூகண்டத்தின் பிரிவினைகளைப் பற்றிச் சொல்கிறது. இது கொஞ்சம் ஆராய்ச்சிக்குரிய பகுதி என்றே சொல்லலாம்!.. பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பிரிவினைகளையே பட்டத்திரியும் சொல்லியிருக்கிறார்.  பூகண்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும், எம்பெருமான் ஒவ்வொரு ஸ்வரூபத்தில் விளங்குவதையும், குறிப்பிட்ட பக்தர்களால் ஆராதிக்கப்படுவதையும் சொல்கிறார்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

​KANNANAI NINAI MANAME.. PART 41...கண்ணனை நினை மனமே.. பகுதி 41....ரிஷப தேவர் சரித்திரம்..(தொடர்ச்சி).


ரிஷபதேவரின் நூறு புதல்வர்களுள், பரதன் அரசுரிமை பெற, மற்ற புதல்வர்களுள் ஒன்பது பேர் யோகீச்வரர்கள் ஆனார்கள். ஒன்பது பேர், இப்பூமண்டலத்தின் ஒன்பது கண்டங்களை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள்..மற்ற எண்பத்தோரு புதல்வர்களும் தவத்தில் சிறந்தவர்களாகி, மானிடர்களில் மிக உயர்ந்த நிலையை தங்கள் தபோ பலத்தால் அடைந்தார்கள். 

KANNANAI NINAI MANAME...PART 40...கண்ணனை நினை மனமே.. பகுதி 40....ரிஷப தேவர் சரித்திரம்..உத்தானபாதனுடைய வம்ச சரித்திரம், பிரசேதஸர்கள்,   முக்தியடைந்ததோடு   நிறைவடைந்தது.. 

பட்டத்திரி, பிரியவிரதனுடைய வம்சத்தின் கதையை அடுத்துக் கூற துவங்குகிறார். பகவான், பிரியவிரதனுடைய பேரனாகிய நாபி என்னும் அரசனிடம், புத்திரனாக அவதரித்த சரித்திரத்தை இந்த தசகத்தில் நாம் காணலாம்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

KANNANAI NINAI MANAME....PART 39....கண்ணனை நினை மனமே.. பகுதி 39. த‌க்ஷன் புனர்ஜென்மம் (தொடர்ச்சி....).

உத்தம பக்தர்களான பிரசேதஸர்கள், தங்கள் முன் தோன்றியருளிய பகவானிடம் எந்த வரமும் யாசிக்கவில்லை.. பிறவியின் நோக்கம் கண் முன்னே பிரகாசிக்கும் போது வேறென்ன வேண்டும்!!!...

புதன், 26 ஆகஸ்ட், 2015

KANNANAI NINAI MANAME... PART 38...கண்ணனை நினை மனமே.. பகுதி 38. த‌க்ஷன் புனர்ஜென்மம்.
இந்த தசகத்தில், பிரசேதஸர்களுக்கு தக்ஷன் புத்திரனாக பிறந்த சரிதம் கூறப்படுகிறது. ப்ருதுவின் கொள்ளுப் பேரனான ப்ராசீன பர்ஹிஸ் என்பவனுக்கும் சதத்ருதி என்ற பெண்ணுக்கும் பிறந்த பத்து புதல்வர்களே பிரசேதஸர்கள்..  இவர்களை  பட்டத்திரி,   'எம்பெருமானின் கருணையின் முளைகள் போன்றவர்களும் நல்ல புத்திசாலிகளுமான பிரசேதஸர்கள்' என்று புகழ்ந்துரைக்கிறார்.

புதன், 19 ஆகஸ்ட், 2015

கொஞ்சம் அல்ல.. நிறையவே வருத்தம்!...

உண்மையில் இந்தப் பதிவினை எழுத நிறையவே வருத்தமாக இருக்கிறது... ஆயினும் சொல்லித் தான் ஆக வேண்டிய நிலை.. 'ஆலோசனை'யில் வெளிவந்த 'சுமங்கலிப் பிரார்த்தனை' பதிவுக‌ள், வரிக்கு வரி, கீழ்க்கண்ட தளத்தில் காபி செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.. 'ஆலோசனை' பதிவுகளின் நிறைவில் இடம் பெறும், 'வெற்றி பெறுவோம்!' முதற்கொண்டு காபி செய்திருக்கிறார்கள். 'ஆலோசனையில்'  இரண்டு  பகுதிகளாக வெளிவந்ததை, ஒரே பகுதியாக வெளியிட்டிருக்கிறார்கள்.  வெளியிடுவோர், வெளியிடும் முன்பாக அனுமதி பெற்றுச் செய்திருக்க வேண்டும். அல்லது.. 'நன்றி' என்று சொல்லி, தளத்தின் முகவரி கொடுத்திருக்கலாம். இரண்டும் செய்யாதது மட்டுமல்ல..நான் அங்கு குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிக் கேட்டும் பதிலேதும் சொல்லாததாலேயே இங்கு குறிப்பிடும் சங்கடம் நேர்ந்தது.. இது எனக்கு மிக மிக வருத்தமளிக்கிறது.

இதைக் குறிப்பிடுவதன் நோக்கம், இம்மாதிரியான செயல்களைத் தடுப்பதற்கே. இம்மாதிரியான செயல்கள் நிறுத்தப்படுமாயின் மகிழ்வடைவேன்....

KANNANAI NINAI MANAME!... PART 37...கண்ணனை நினை மனமே.. பகுதி 37. ப்ருது சரித்திரம். (தொடர்ச்சி..).ப்ருது சக்கரவர்த்தி, மேடு பள்ளமாக இருந்த பூமியை சமப்படுத்தி, புரங்கள், பட்டினங்கள், வயல்கள், மலை வாசஸ்தலங்கள் என்றெல்லாம் தனித்தனியாக அமைத்தார். அதற்கு முன்பாக இது போன்று இருந்ததில்லை என்கிறது ஸ்ரீமத் பாகவதம்..​

வெள்ளி, 31 ஜூலை, 2015

KANNANAI NINAI MANAME.. PART 36.. PRUTHU CHARITHRAM...கண்ணனை நினை மனமே.. பகுதி 36.. ப்ருது சரித்திரம். (தொடர்ச்சி..)


வேனன் அழிந்ததும், முனிவர்கள் வேதனையடைந்தனர்.. மீண்டும் நாட்டிற்கு அரசன் வேண்டுமல்லவா?!...துஷ்டர்களாகிய நாட்டு மக்களுக்கு பயந்தவர்களான‌ முனிவர்கள், வேனனின் தாயிடம் சென்று, அவளால் பல நாட்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வேனனின் உடலை வாங்கி, அதன் தண்டாயுதம் போன்ற துடையை தங்கள் மந்திர சக்தியால் கடைந்தனர். அதனால், வேனனின் பாவம் விலகியது.. அதன் பின், கை கடையப்பட்ட போது, பகவான் (ப்ருது என்னும் பெயருடையவராக) அதிலிருந்து தோன்றினார்!!!!!!....

KANNANAI NINAI MANAME.. PART 35... PRUTHU CHARITHRAM..கண்ணனை நினை மனமே.. பகுதி 35.. ப்ருது சரித்திரம்.


பகவான், ஜீவர்களைக் கடைத்தேற்ற வேண்டி, பற்பல அவதாரங்களை எடுத்தார். அவற்றுள் தசாவதாரங்கள், மிகவும் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. அந்தப் பத்து அவதாரங்களைத் தவிரவும், பகவான் எடுத்தருளிய மற்ற அவதாரங்கள், ஸ்ரீமத் பாகவதத்திலும், ஸ்ரீமந் நாராயணீயத்திலும் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்றே, ஸ்ரீ ப்ருது சக்கரவர்த்தியின் அவதார வைபவம்.

சனி, 11 ஜூலை, 2015

KANNANAI NINAI MANAME....PART 34...கண்ணனை நினை மனமே!... பகுதி 34...துருவ சரித்திரம் (தொடர்ச்சி).

எம்பெருமான் துருவனுக்கு ஆசி கூறி, அவன் முன்பிருந்து தம் திருவுருவை மறைத்தருளியதும், அவன்  தன் நாட்டு மக்கள் அனைவரையும்  மகிழ்விப்பவனாக, நகருக்குத் திரும்பினான். தன் தந்தை வானப்பிரஸ்தம் மேற்கொண்ட பிறகு, அரசாட்சியை ஏற்றான்.  நீண்ட காலம் அரசாண்டு இன்புற்று வாழ்ந்தான்.

வியாழன், 25 ஜூன், 2015

KANNANAI NINAI MANAME... PART 33.....கண்ணனை நினை மனமே.. பகுதி 33.. துருவ சரித்திரம்.. (தொடர்ச்சி)...


துருவன் தவம் செய்யச் சென்றதும், செய்தியறிந்த துருவனின் தந்தையின் மனம் கலக்கமடைந்தது. தான் செய்த தவறை நினைத்து வருந்தினான். அப்போது அவன் முன் வந்த நாரத மஹரிஷி, அவனை சமாதானப்படுத்தினார்.

மதுவனத்தில், பாலன் துருவன், பகவானிடம் மனதை அர்ப்பணம் செய்து, படிப்படியாக, தன் தவத்தின் கடுமையை அதிகரித்தான். இவ்வாறு ஐந்து மாதங்கள் கழிந்தன. 

வெள்ளி, 19 ஜூன், 2015

KANNANAI NINAI MANAME....PART 32...கண்ணனை நினை மனமே!... பகுதி 32.....துருவ சரித்திரம்


இந்த தசகத்தில், மகாத்மாவும் பக்த சிரேஷ்டனுமான துருவனின் திவ்ய சரித்திரம் உரைக்கப்படுகின்றது. பக்தர்களின் சிறந்தவரும், பகவானின் கருணைக்கு அதிவிரைவில் பாத்திரமானவருமான துருவனின் சரித்திரம்,  படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பகவானின் மேல் அசையாத பக்தியை உருவாக்க வல்லது!.. 

தேவரிஷியான நாரதர், 'வேறு எவராவது இப்பூவுலகில் பல ஆண்டுகளிருந்த போதிலும், துருவன் அடைந்த பதவியை (பதத்தை) அடைய ஆசையாவது கொள்வானா?' என்று துருவனின் புகழை உயர்த்திக் கூறுகின்றார் (ஸ்ரீமத் பாகவதம்).

'இதனை சிரத்தையுடன் கேட்பவன், தன்னுள் தானாகவே ஆனந்தானுபவம் பெற்று சித்தியடைவான்' என்று சொல்கிறது ஸ்ரீமத் பாகவதம்..

துருவ சரித்திரம், ஸ்ரீமத் பாகவதத்தில் மிக விரிவாக உள்ளது.  நாம் இங்கு பட்டத்திரியின் திருநோக்கின் வழியாக துருவ சரித்திரத்தைப் பார்க்கலாம்!.

KANNANAI NINAI MANAME...PART 31....கண்ணனை நினை மனமே!... பகுதி 31..த‌க்ஷ யாகம்.


த‌க்ஷ பிரஜாபதியின் யாகம் பற்றி, அநேகமாக, நம்மில் பலருக்குத் தெரிந்திருக்குமெனினும், இந்தப் பதிவில், பட்டத்திரியின் திருநோக்கு வழியாக, நாம் தக்ஷ யாகம் பற்றிப்  பார்க்கலாம்.​

புதன், 27 மே, 2015

KANNANAI NINAI MANAME....PART 30...கண்ணனை நினை மனமே!... பகுதி 30...நர நாராயணாவதாரம் .


​சென்ற தசகத்தில், நாம், கபில மஹரிஷி, தன் திருவாக்கினால் உரைத்த, கபில கீதையை கேட்டு, கபில மஹரிஷியைத் தியானித்தோம்!.. யாரொருவர், பக்தி, சிரத்தையுடன், கபில மஹரிஷியின் அவதார வைபவத்தையும், கபில கீதையையும் கேட்கிறார்களோ அல்லது உபதேசிக்கிறார்களோ, அவர்களுக்கு, பகவானின் பாதாரவிந்தங்களில் நிலைத்த பக்தியும், மோக்ஷமும் கிடைக்கும் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது.

இந்த தசகம், நர நாராயணர்கள் அவதரித்த நிகழ்வு குறித்தும், ஸஹஸ்ர கவசன் என்னும் அசுரனை, அவர்கள் சம்ஹாரம் செய்தது குறித்தும், இந்திரனது கர்வத்தை அடக்கியமை குறித்தும் விவரிக்கிறது. 

KANNANAI NINAI MANAME.....PART 29.....கண்ணனை நினை மனமே!.. பகுதி 29... கபில கீதை (தொடர்ச்சி..).கபில மூர்த்தி, தொடர்ந்து, பின்வருமாறு தேவஹூதிக்கு உபதேசிக்கலானார்.

'பெண்ணின் வயிற்றில் புகும் ஜீவனானவன், பல துன்பங்களை அடைகிறான். அவற்றினின்றும் நீங்குவதற்கு இயலுவதில்லை.. இருப்பினும், (கர்ப்ப காலத்திலேயே) தெளிந்த ஞானத்தை  அடைகிறான். ஆயினும், பிரசவ காலத்தில், ஞானத்தை இழந்து விடுகின்றான். பல வித தொல்லைகளுடனும்  பீடைகளுடனும் பால்யத்தைக் கடக்கிறான்.  இளமையில் மீண்டும் மதி மயக்கத்தை அடைகிறான்....இது என்ன கஷ்டம்!' என்று தேவஹூதிக்கு பகவான் உபதேசித்தார்.

செவ்வாய், 5 மே, 2015

KANNANAI NINAI MANAME.. PART 28...கண்ணனை நினை மனமே!.. பகுதி 28... கபில கீதை (தொடர்ச்சி..).உத்தம பக்தி!!..


கபிலராக அவதரித்த பகவான் ஸ்ரீவிஷ்ணு, தன் தாயாகிய தேவஹூதிக்கு, மேலும் உபதேசிக்கிறார்!. என்ன விதமான செயல்களைச் செய்தால், உத்தம பக்தி உண்டாகும் என்று கூறுகின்றார்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

KANNANAI NINAI MANAME...PART 27...கண்ணனை நினை மனமே!.. பகுதி 27..கபில கீதை...கபில மாமுனிவரின் தாயாகிய தேவஹூதிக்கும், கபிலருக்கும் நடந்த சம்வாதமாக, ஸ்ரீமந் நாராயணீயம்  கூறும்  ஸாங்கிய யோகத்தின் முதல் பகுதியை இப்போது பார்க்கலாம். 

KANNANAI NINAI MANAME...PART 26....கண்ணனை நினை மனமே.. பகுதி 26...கபில அவதாரம்.


ஸ்ரீமத் பாகவதத்தில், பகவானின் அவதார மகிமைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பகவானின் பத்து அவதாரங்களைத் தவிர, மன்னுயிர்களுக்கு நல்வழி காட்டும் பொருட்டு, எடுத்த, வேறு சில அவதாரங்களும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீமந் நாராயணீயத்திலும், அற்புதமான ஸ்லோகங்களால், அவை சுருக்கமாக விளக்கப்படுகின்றன.

சனி, 11 ஏப்ரல், 2015

KANNANAI NINAI MANAME... PART 25....கண்ணனை நினை மனமே.. பகுதி 25...(ஹிரண்யாக்ஷ வதம்).​


சென்ற தசகத்தில், எம்பெருமான், பூமி தேவியை, தன் கோரைப் பற்களில் ஏந்தி, பிரளய நீரிலிருந்து வெளிவந்த லீலையைத் தியானித்தோம்!..

கிடந்திருந்துநின்றளந்து கேழலாய்க்கீழ்புக்
கிடந்திடும், தன்னுள்கரக்குமுமிழும்,
தடம்பெருந்தோளாரத்தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால்செய்கின்றமாலார்க்காண்பாரே.

KANNANAI NINAI MANAME..PART 24...கண்ணனை நினை மனமே!.. பகுதி:24..வராஹ அவதாரம் (தொடர்ச்சி).ஸ்ரீமத் பாகவதத்தில், மைத்ரேயர் மற்றும் விதுரரிடையே நடைபெறும் உரையாடலில், வராஹ அவதாரம் குறித்துச் சொல்லப்படுகின்றது.. ஸ்வேத வராஹ கல்பத்தில், ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் பிரம்மாவின் நாசியிலிருந்து தோன்றி, பூமியைக் காத்தார் பகவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

வியாழன், 26 மார்ச், 2015

KANNANAI NINAI MANAME.. PART 23...கண்ணனை நினை மனமே!.. பகுதி 23...சனகாதியர் வைகுண்டம் செல்லுதல் (தொடர்ச்சி).


சாபம் பெற்ற ஜய விஜயர்கள், அந்த சாபத்தின்படி, முதல் பிறவியில், கச்யப மஹரிஷிக்கும், திதி தேவிக்கும் புத்திரர்களாகப் பிறந்ததையும், அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் இப்போது பார்க்கலாம்..

KANNANAI NINAI MANAME...PART 22...கண்ணனை நினை மனமே!.. பகுதி 22...சனகாதியர் வைகுண்டம் செல்லுதல். ​​

''மனு' என்கிற ஆணும், 'சதரூபை' என்கிற பெண்ணுமாகிய (தம்பதிகள்) ரூபங்களை அடைந்தார் பிரம்ம தேவர்' என்று சென்ற தசகத்தின் நிறைவில் பார்த்தோம்...அவ்விதம் தோன்றிய மனுவானவர், 'ஸ்வயாம்புவ மனு' என்ற பெயரால் அறியப்பட்டார். அவருக்கும் சதரூபாவுக்கும் ப்ரிய விரதர், உத்தான பாதர் என்ற இரண்டு மகன்களும், ஆகூதி, தேவஹூதி, பிரஸூதி என்ற பெயருடைய மூன்று மகள்களும் பிறந்தனர்.

ஞாயிறு, 22 மார்ச், 2015

SOUBHAGYA GOWRI VIRATHAM, GANGOUR VIRATHAM....சௌபாக்கிய கௌரி விரதம், கங்கௌர் விரதம் (22/03/2015)சென்ற பதிவின் தொடர்ச்சி..

அன்பர்களுக்கு வணக்கம்!.

சென்ற பதிவில், கௌரி விரதம் அனுஷ்டிக்கும் விதத்தின் முதல் முறையினைப் பார்த்தோம்..அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையினையும், ராஜஸ்தானத்தில், 'கங்கௌர்' என்ற பெயரில் இது அனுசரிக்கப்படுவதையும், 'அருந்ததி விரதம்' என்று, சில பகுதிகளில் அனுஷ்டிக்கப்படும் விதம் குறித்தும் பார்க்கலாம்..

SOUBHAGYA GOWRI VIRATHAM, CHAITRA GOWRI VIRATHAM....சௌபாக்கிய கௌரி விரதம், சைத்ர கௌரி விரதம்...(22/3/2015)

 

அன்பர்களுக்கு வணக்கம்!..

இந்தியாவின் பல பாகங்களிலும் கொண்டாடப்படும் பலவகை விரதங்களை, இயன்ற அளவில் பதிவிட்டு வருகின்றேன். குறிப்பாக 'கௌரி விரத'ங்களை அதன் விதிமுறைகளுடனும், இயன்றால் விரத பூஜைக் கதைகளுடனும் பதிவிட்டு வருகின்றேன்.. இந்த பதிவில், சித்திரை மாதம் அனுஷ்டிக்கப்படும், முக்கியமான ஒரு கௌரி விரதம் பற்றி அறிந்து கொள்ளலாம்..

திங்கள், 16 மார்ச், 2015

KANNANAI NINAI MANAME!..PART 21...கண்ணனை நினை மனமே!.. பகுதி 21.. சிருஷ்டி பேதம்!.

இந்த தசகத்தில், பிரம்மதேவர், புல் முதலான தாவர வகைகள் துவங்கி, மனிதர்கள், தேவர்கள் வரை சிருஷ்டித்தது விளக்கப்படுகின்றது.. 

எம்பெருமானது அனுக்ரக‌த்தால், பலம் பெற்ற பிரம்ம தேவர், பூமியில், தாவர வகைகள், பசு, பறவையினங்கள், மானிடர்கள், தேவர்கள் ஆகியோரின் சரீரங்களை சிருஷ்டித்தார். அவ்வாறு சிருஷ்டிக்கும் வேளையில், அவரையறியாமல், ஐந்து விதமான அஞ்ஞான(அறியாமை) விருத்திகளும் படைத்தார்.

KANNANAI NINAI MANAME..PART 20... கண்ணனை நினை மனமே!..பகுதி 20...


எம்பெருமானது திவ்ய தரிசனம் பெற்ற பின்னர், பிரம்ம தேவர், தம் உள்ளிருந்து இயக்குமாறு பகவானை வேண்டியதும், அவரது வேண்டுதலுக்கிணங்க, எம்பருமான் அனுக்கிரகம் செய்தததும், பிரம்ம தேவர் சிருஷ்டியைத் துவங்கியதும் இந்த தசகத்தில் விவரிக்கப்படுகின்றது..

புதன், 25 பிப்ரவரி, 2015

KANNANAI NINAI MANAME!...PART 19... கண்ணனை நினை மனமே!.. பகுதி 19. பிரம்ம தேவரின் தவம்!..

Image result for BANKE BIHARI

இந்த தசகம், பிரம்ம தேவரின் தவம் குறித்தும், அதன் பின்னர், பகவானின் அருளால், அவர், சிருஷ்டியைத் துவக்கிய  விதம் குறித்தும் விவரிக்கிறது.. சென்ற தசகத்தின் நிறைவில், பகவானின் நாபிக் கமலத்திலிருந்து மேலெழும்பிய தாமரை மலரில், பிரம்ம தேவர் தோற்றமானது பற்றிப் பார்த்தோம்.. அதைத் தொடர்ந்த நிகழ்வுகளை, இந்த தசகத்தில் பட்டத்திரி கூறுகின்றார்...

புதன், 28 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME!.. PART 18....கண்ணனை நினை மனமே!..பகுதி 18....பிரளயமும் சிருஷ்டியும்.....(தொடர்ச்சி..)

(சென்ற பதிவின் தொடர்ச்சி!)..

"பிரம்ம தேவர், அவருடைய பகல் பொழுது நிறைவடைந்ததும், உறக்கத்தை விரும்பியவராக, உம்மிடம்(பகவானிடம்) இணைந்தார்...மூன்று உலகங்களும், உம் திருவயிற்றில் ஒடுங்கின. அப்போது, இந்த பிரபஞ்சம் முழுவதும், சமுத்திர மயமாகவே ஆகிவிட்டது".

KANNANAI NINAI MANAME!...PART 17..கண்ணனை நினை மனமே!.. பகுதி 17..பிரளயமும் சிருஷ்டியும்.

பட்டத்திரி, இந்த தசகத்தில், பிரளயமும் அதைத் தொடர்ந்து, சிருஷ்டி நடைபெறும் விதமும் பற்றி விவரிகின்றார். 

KANNANAI NINAI MANAME!...PART..16...கண்ணனை நினை மனமே!..பகுதி 16..ஹிரண்யகர்ப்ப உற்பத்தி!..(தொடர்ச்சி)..

(சென்ற பதிவின் தொடர்ச்சி...).

நானாதி³வ்யவதூ⁴ஜனைரபி⁴வ்ருʼதா வித்³யுல்லதாதுல்யயா
விஸ்²வோன்மாத³னஹ்ருʼத்³யகா³த்ரலதயா வித்³யோதிதாஸா²ந்தரா| 
த்வத்பாதா³ம்பு³ஜஸௌரபை⁴ககுதுகால்லக்ஷ்மீ​: ஸ்வயம்ʼ லக்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயனீயதி³வ்யவிப⁴வம்ʼ தத்தே பத³ம்ʼ தே³ஹி மே ||

("ஸ்ரீ அப்பனே!, பல தேவமாதர்களால் சூழப்பட்டும், எல்லா உலகங்களையும் மயக்க வல்ல, மின்னல் கொடி போன்ற திவ்ய திருமேனியால் திசையனைத்தையும் பிரகாசிக்கச் செய்து கொண்டும், உமது திருவடித் தாமரைகளின் வாசனையை முகர்வதொன்றிலேயே விருப்பத்துடனும், எந்த உலகத்தில் ஸ்ரீலக்ஷ்மி தேவியானவள் விளங்குகின்றாளோ, அந்த வைகுண்ட பதவியை எனக்கும் தந்தருள வேண்டுகிறேன்!!!....").

புதன், 14 ஜனவரி, 2015

KANNANAI NINAI MANAME...PART 15...கண்ணனை நினை மனமே!..பகுதி 15..ஹிரண்யகர்ப்ப உற்பத்தி!..

பட்டத்திரி, இந்த தசகத்தில் பிரம்மாவின் தோற்றம் குறித்தும், அவர் சிருஷ்டி காரியங்களைத் தொடங்கும் முன்பாக, தவம் செய்யத் தொடங்கியது, பிரம்ம தேவருக்கு, வைகுண்டம் காட்டப்பட்டது, அங்கு அவர் கண்ட காட்சிகள், பிரம்ம தேவரின் பிரார்த்தனை  போன்றவற்றைக் குறித்தும் விளக்குகின்றார் . பிரம்ம தேவருக்கு 'ஹிரண்ய கர்ப்பன்' என்ற பெயரும் உண்டு.. அதன் காரணமாகவே,  இந்த தசகத்திற்கு, "ஹிரண்ய கர்ப்ப உற்பத்தி"  என்ற பெயர். 

KANNANAI NINAI MANAME!... PART 14....கண்ணனை நினை மனமே!.. பகுதி 14....விராட்புருஷ உருவம்!..

 

ஒன்றான பரம்பொருள், பலவாகி விரிந்ததோடு, எல்லாமும் தானாகி நின்றதொரு திறம் போற்றிப் பாடுகின்றார் பட்டத்திரி!.. காருண்ய ரூபனான பரமாத்மா, பரந்த இப்பிரபஞ்சம் அனைத்தும் வியாபித்து, சகல லோக ஸ்வரூபனாக அருளும் அற்புதத்தை நாமும் தியானிக்கலாம்!...

KANNANAI NINAI MANAME!.. PART 13...கண்ணனை நினை மனமே!..பகுதி 13..விராட்புருஷ உற்பத்தி!..(தொடர்ச்சி).


விராட்புருஷ உற்பத்தி குறித்து, பட்டத்திரி மேலும் சொல்கிறார்!..

​"குருவாயூரப்பா!..நீர்  மாயைக்கு அருகில் இருந்தாலும், அதனுடன் கலவாத ரூபத்துடன் இருப்பதால், ஸாக்ஷீ (பார்க்கக் கூடியவன்) என்று கூறப்படுகின்றீர்!..அந்த மாயையில் பிரதிபிம்பமாக, ஆனால் வேறுபட்டதாகத் தோன்றும் ஜீவனும் நீரே!..உம்மால் ஏவப்பட்ட அந்த மாயையே, காலம், கர்மம், சுபாவம் என்று பலவாக விளங்குகின்றது.. அதுவே, புத்தி தத்வம் எனப்படும் 'மஹத்' தத்வத்தை உண்டாக்கியது..".

KANNANAI NINAI MANAME...PART ..12...கண்ணனை நினை மனமே!.. பகுதி 12..விராட்புருஷ உற்பத்தி!..


சென்ற பதிவு குறித்து சிறியதொரு விளக்கம்!..

சென்ற பதிவில், "சத்யோ முக்தியை விரும்பினால், ஆறு ஆதாரங்களைக் கடந்த பின் உம்மிடம் லயிக்கின்றான்" என்று வரும் வரி குறித்த அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமான விளக்கம் இது.. ஆறு ஆதாரங்கள் என்பது நம் உடலில் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களைக் குறிக்கும்.. இது குறித்து, முன்பே 'ஆறாதாரமும் மூலாதாரமும்' (சொடுக்குக) பதிவில் எழுதியிருக்கிறேன்.. அதனைத் தொடர்ந்த பதிவுகளில் ஒவ்வொரு ஆதாரச் சக்கரத்தைக் குறித்தும் விளக்கியிருக்கிறேன். பதிவுகளில் இருக்கும் விஷயங்கள், பெரியோர்களின் வாய்மொழி மூலமாகவும், அவர்கள் பரிந்துரைத்த நூல்களில் இருந்த தகவல்களைத் தொகுத்தும் எழுதப்பட்டன‌.