நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 26 ஆகஸ்ட், 2015

KANNANAI NINAI MANAME... PART 38...கண்ணனை நினை மனமே.. பகுதி 38. த‌க்ஷன் புனர்ஜென்மம்.




இந்த தசகத்தில், பிரசேதஸர்களுக்கு தக்ஷன் புத்திரனாக பிறந்த சரிதம் கூறப்படுகிறது. ப்ருதுவின் கொள்ளுப் பேரனான ப்ராசீன பர்ஹிஸ் என்பவனுக்கும் சதத்ருதி என்ற பெண்ணுக்கும் பிறந்த பத்து புதல்வர்களே பிரசேதஸர்கள்..  இவர்களை  பட்டத்திரி,   'எம்பெருமானின் கருணையின் முளைகள் போன்றவர்களும் நல்ல புத்திசாலிகளுமான பிரசேதஸர்கள்' என்று புகழ்ந்துரைக்கிறார்.
குறையொன்றுமில்லாத கோவிந்தனின் பெருங்கருணையைப் போற்றுவதெவ்வாறு?..அத்தகைய கருணையின் முளைகள் என்று பிரசேதஸர்களைக் குறித்ததால், அவர்களின் புனிதம் வெளிப்படுத்தப்பட்டது...

'பகவானைத் தியானித்து, தவம் புரிக' என்ற, தம் தந்தையின் கட்டளைக்குக் கீழ்படிந்து, பிரசேதஸர்கள் பத்து பேரும், மேற்கு சமுத்திரத்தை அடைந்தனர். அதன் கரையில் ஒரு அழகிய ஏரியைக் கண்டனர். அவர்கள் அந்த இடத்தை அடைந்த போது, பகவானின் பக்தர்களின் சிறந்தவரான ருத்ரர் அங்கு தோன்றியருளினார். பிரசேதஸர்களும் பகவானின் பக்தர்கள் என்பதால், அவர்களைக் காணும் ஆவல் கொண்டே அவ்விடத்தில் ருத்ரர் தோன்றினார்.

பிரசேதஸர்களுக்கு, பகவானைப் பற்றிய, 'ருத்ரகீதை' என்ற ஸ்தோத்திரத்தையும் உபதேசித்தருளினார் ( 'சீடன் தயாராகும் போது, குருவானவர் தாமே தோன்றுவார்' என்ற உத்தம வாக்கியத்தை இங்கு நினைவு கூரலாம்..). பிரசேதஸர்கள், நீரின் மத்தியிலிருந்து கொண்டு, அந்த ஸ்தோத்திரத்தை ஜபித்து, பதினாயிரம் வருட‌ங்கள் தவமியற்றினார்கள். பகவானை பூரணமாகத் தியானித்து, அவரிடமே லயித்து தவம் செய்தார்கள்..அந்த பிரம்மானந்த ரசத்திலேயே அவர்கள் ஆழ்ந்து விட்டபடியால், அவர்களுக்கு தவத்திலேயே இத்தனை காலம் சென்றது..துருவனை போல், வெகு சீக்கிரம் அவர்களுடைய தவம் பூர்த்தியாகவில்லை.. இவர்களுடைய தவத்தின் காரணமாக, பெரும் பாவங்களைச் செய்த, இவர்களது மூதாதையான வேனனும் புனிதனானான். இவர்களின் தந்தையான பிராசீன பர்ஹிஸ், தம் இல்லத்தில் எழுந்தருளிய நாரத முனிவரால், ஆத்ம ஞானம் உபதேசிக்கப்பட்டு, பகவானின் திருவடிகளை அடைந்தார்.

பிரசேதஸர்களின் சிறந்த தவத்தின் காரணமாக மனமகிழ்ந்த பகவான், கருட வாகனத்தில், சக்கரம் முதலான ஆயுதங்கள் ஒளி வீசும் எட்டுத் திருக்கரங்களுடன், எங்கும் நிறைந்தொருளிரும் பிரகாசத்துடன், தம் கருணையின் மேலீட்டால் பிரசேதஸர்களின் முன்பாகத் தோன்றியருளினார்.

க்ருʼபாப³லேனைவ புர​: ப்ரசேதஸாம்ʼ 
ப்ரகாஸ²மாகா³​: பதகே³ந்த்³ரவாஹன​: |
விராஜி சக்ராதி³வராயுதா⁴ம்ʼஸு²பி⁴​: 
பு⁴ஜாபி⁴ரஷ்டாபி⁴ருத³ஞ்சிதத்³யுதி​: || (ஸ்ரீமந் நாராயணீயம்).

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு. (பேயாழ்வார்).

(தொடர்ந்து தியானிக்கலாம்...).

வெற்றி பெறுவோம்!..'

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

  1. Namaskaram Madam,
    I am Vaishnavi from Erode(Tamilnadu).I am coming from Telugu Bhramin family married a guy who from Kannada Madhwas .Basically almost some rituals are same between us like Nagachadurthi,Garuda Panchami,Varalakshmi vrutham etc., I was read ur post named Anantha vrutham part I & II 1 weak ago. In my home do the Anantha vrutham,but my Husband home haven’t this pooja customs. Now I decided follows the madhva customs,in the same time made the all poojas & vrutham from both of 2.now I cinfused about 2 are following:

    a) V.Lakshmi vrutham mamiyar veetuku undu.But mamiyarin mamiyar yen mamiyaruku yeduthu kodukkatha karanathinal past 5 yrs seyyamal irunden.Now my mamiyar grant the permission for V.Lakshmi and my mom will be V.Lakshmi poojai yeduthu koduppargal coming Vinayak Chadurthi.
    b) My father oppose the anantha vrutham and not ready to give me,due to my husband home haven’t this pooja.But I wishes to made this.
    c) My periyamma and periyappa only poojai seivargal.becoz he is the elder of family and financially sound.My family only attend the poojai and thoram kattikolvom.amma appave vrutham yeduthu kodukkalama? Or periyamma than yeduthu thara venduma?
    d) Illai yeduku vambu yendru ananthanin picture mattum vaithu 14 countings illamal as usual naivedhyam vaithu upavasam mattum irukkalam yena yennugiren.Water kalasam custom mamiyar veetil illai.V.Lakshmiye Arisi kalasamthan.
    e) As per rules is right or wrong? I think always god saves who trust him.palakkam illamal seithal thappa yena payama irukkiradhu.(father-in-law and mother-in-law above 90,80 respectively.)Please kindly guide me. I am waiting for ur reply madam.



    பதிலளிநீக்கு
  2. தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா!..அனந்த விரதம் குறித்து, தங்கள் தந்தையிடம் பேசி, சம்மதம் வாங்க முயற்சி செய்யவும்.. இறைவனை வழிபடும் விஷயத்தில், குடும்பத்தில் வழக்கம் இருக்க வேண்டும் என்பது அவசியம் தான். ஆனாலும் ஆர்வம், பக்தி இவைகளைப் பொறுத்து, விதிகளைக் கொஞ்சம் தளர்த்தலாம் என்பது என் அபிப்பிராயம்.. பெரியவர்களின் ஆசீர்வாதம் முக்கியம் என்பதால் அப்பாவிடம் பேசவும்.. பூஜை ஆரம்பிப்பதில் தவறேதுமில்லை.. 'நல்லது செய்து கெட்டது வராது' என்பார் என் பாட்டி. ஸ்வாமியை பூஜை செய்தால் நல்லதே நடக்கும்...அப்பாவிடம் சம்மதம் கேட்கவும்.

    அப்பா சம்மதித்தால், அப்பா, அம்மாவே பூஜை எடுத்துக் கொடுக்கலாம்... ஏனென்றால் பூஜை இருந்தும், பெரியவர்கள் இருப்பதால் பூஜை செய்வதில்லை அவ்வளவே. ஆகையால் பூஜை எடுத்துத் தரலாம்.. பூஜையில், நீர் கலசம் வைப்பதில் சங்கடம் இருந்தால், படம் வைத்து பூஜை செய்யலாம்...

    இவற்றை எடுத்துச் சொன்ன பிறகும், பெரியவர்கள் யோசித்தார்கள் என்றால், ஸ்வாமி முன்பு திருவுளச் சீட்டு, (இரண்டு துண்டு பேப்பரில், ஒன்றில் 'சரி', என்றும் மற்றொன்றில் 'வேண்டாம்' என்றும் எழுதி, ஸ்வாமி முன்பு போட்டு, கண்களை மூடிக் கொண்டு, ஏதேனும் ஒரு சீட்டு எடுப்பது) போட்டுப் பார்த்து, எது வருகிறதோ, அதை ஸ்வாமியின் திருவுளம் என்று முடிவு செய்யவும். பெரியவர்கள் ஆசி மிக முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for ur advise madam.Past three days i discuss with my mother in law and father.avargal avargalin vishayathil strong aga ullanar.nanumthan.thiru ula cheetu pottu parthu vittu ungalukku msg pannugiren madam.Yellam avan seyal.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..