நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2020

KANNANAI NINAI MANAME...BAGAM IRANDU..PART 43. க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.43...மண்ணை ஓரடியால் அளந்தவன், மண் தின்ற லீலை!..

 Pin on BHAGAVATAM 

பால கோபாலன், இப்போது ஓடியாடி விளையாடி மகிழும் பருவத்தை அடைந்து விட்டான்!.. ஆனால் குறும்போ.. அப்பப்பா!.. என்னவென்று சொல்வது?!.. ஒரு நாள், தன்னுடன் விளையாடும் சிறுவர்களுடன் பழங்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்தான். மற்ற சிறுவர்கள் சேர்த்து வைத்திருந்த பழங்களை, அவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டான் கோவிந்தன்.. அவன் நாமம் சொன்னவர்களின் 'பழ' வினைகளை, அவர்களுக்குத் தெரியாமலே எடுத்துக் கொண்டு, முக்திப் பழ'த்தை அவர்களுக்கு அளித்து சந்தோஷிக்கும் எம்பெருமான்,என்ன காரணத்தாலோ இந்த லீலை செய்தான்!!.. அவனுக்குத் தெரியாதோ என்ன நடக்கப் போகிறதென்று.. அவன் திட்டம் செய்ததே நடந்தது!..