மாயையானவள், தேவகியின் கரம் சேர்ந்தாள்!.. விலங்குகள் தாமாகப் பூட்டிக் கொண்டன. சிறையின் கதவுகள் அடை பட்டன. பகவானின் தங்கையாகப் போற்றப்படும் யோக மாயை, பெருங்குரலெடுத்து அழுதாள்!. அந்த அழுகுரலைக் கேட்ட சிறைக் காவலர்கள், ஓடிச் சென்று கம்சனிடம், தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்த செய்தியைச் சொன்னார்கள்!.. தலைவிரி கோலமாக சிறைச்சாலை நோக்கி ஓடி வந்த கம்சன், தன் தங்கையின் கரங்களில் ஒரு பெண் குழந்தை இருக்கக் கண்டு கலங்கினான்!!. 'இது கபடசாலியான மதுசூதனனின் மாயையே!' என்று தீர்மானித்த அவன், தேவகியின் கரங்களிலிருந்த, பிறப்பற்றவளும் பகவானின் தங்கையுமான அந்தக் குழந்தையை, குளத்திலிருக்கும் தாமரைக் கொடியை ஒரு யானை பிடுங்குவது போல் பிடுங்கி, பாறையில் ஓங்கி அடித்தான்!!..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
சனி, 22 செப்டம்பர், 2018
KANNANAI NINAI MANAME... BAGAM IRANDU.. PART 34...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.34 கோகுலம் வந்தான்!..
மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவராகி, தம் நெஞ்சாரத் துதித்துத் தொழுதார்!..'தேவ தேவனே!, துன்பக் கட்டுக்களை நீக்க வல்லானே!, கருணை நிறைந்த தங்களுடைய கடைக்கண் பார்வையால், வருத்தங்களை எல்லாம் போக்கி அருள வேண்டும்!!' என்றெல்லாம் பலவாறாகத் துதித்துத் தொழுதார் வசுதேவர்!..
திங்கள், 3 செப்டம்பர், 2018
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART..33..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.33 ஸ்ரீ கிருஷ்ணாவதார மஹோத்ஸவம்!!!!....
ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை (விருச்சிக) மாதம் 28ம் நாள், , பெரியோர்களால் நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது.. தினம் ஒரு தசகமாக, நாராயணீயம் பாடித் துதித்த ஸ்ரீபட்டத்திரி, கார்த்திகை (விருச்சிக) மாதம் 28ம் நாள், ஸ்ரீமந் நாராயணீயத்தை நிறைவு செய்ய, அன்றே ஸ்ரீ குருவாயூரப்பன் தன் திவ்ய தரிசனத்தை அவருக்கு அளித்தருளினான்!!!!.. பெரியோர்கள் பலரும், கார்த்திகை மாதம் 28ம் நாளை 100வது தினமாகக் கொண்டு, அதற்கு முன்பாக 100 தினங்களை எண்ணி வைத்துக் கொண்டு, தினம் ஒரு தசகமாகப் பாராயணம் செய்து, கார்த்திகை மாதம் 28ம் நாள், 100வது தசகத்தைப் பாராயணம் செய்து நிறைவு செய்வது வழக்கம். மஹான்கள் பலரும் இவ்விதம் செய்து ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் பெற்றமையை அவர்கள் திவ்ய சரிதங்களின் வாயிலாக நாம் அறியலாம். இன்றே பவித்ரமான அந்த நாள்!.. ஸ்ரீ குருவாயூரப்பனையும், பட்டத்திரியையும் போற்றித் துதி செய்து, ஸ்ரீ கிருஷ்ணாவதார மஹோத்சவத்தை நாம் தியானிக்கலாம்!..ஸ்ரீமந் நாராயணீயத்தை, ராகத்துடன் பாடுகையில். ஸ்ரீ கிருஷ்ணாவதார மஹோத்சவத்தை பிலஹரி ராகத்தில் பாடுவது வழக்கம்..குகைக்குள் (பிலத்தில்) இருந்து மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு வரும் சிம்மம் போல், பரமாத்மா, தன் தாயின் திருவயிற்றில் இருந்து இவ்வுலகில் அவதரிக்கும் மஹோத்சவத்தை பிலஹரி ராகத்தில் பாடித் துதிப்பர்!.
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 32...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.32 தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசித்தார்!..
தேவகியின் கூந்தலைப் பற்றியிருந்த கம்சனின் கைகள், அதனை விடவேயில்லை!.. வசுதேவர் வெகு நேரம் அவனை சமாதானப்படுத்தியும் அவன் விடவில்லை.!!..பின் வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை எல்லாம் அவனிடம் கொடுத்து விடுவதாக வாக்களித்த பின், கம்சன் ஒப்புக் கொண்டு, தன் வீட்டுக்குத் திரும்பி விட்டான்!!.. அவ்வாறே, தேவகிக்கு முதல் குழந்தை பிறந்ததும், அதனை எடுத்துக் கொண்டு போய், கம்சனிடம் சமர்ப்பித்த போது, மனதில் தோன்றிய இரக்கத்தால், கம்சன் அதனைக் கொல்லவில்லை!!.. துஷ்ட புத்தியுடையவர்களிடம் கூட ஒவ்வொரு சமயம் கருணையானது காணப்படுகிறதல்லவா?!!.
KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU.. PART .31...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.31 தேவாதி தேவன் திருவடியே சரண்!!.
பூர்ணாவதாரம்' என முக்தர்களும் பக்தர்களும் துதிக்கும், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கான பூர்வ காரணங்களை முதலில் சொல்லத் துவங்குகிறார் பட்டத்திரி!.. முன்பு நடந்த தேவாசுர யுத்தத்தில், காலநேமி முதலான அசுரர்கள், எம்பெருமானின் திருக்கரங்களால் கொல்லப்பட்டாரெனினும், அவர்களது புண்ணிய, பாப மிகுதிகளின் காரணமாக அவர்களால் உத்தம கதியை அடைய இயலவில்லை.. அதாவது, அவர்களது இருவினைகள் முற்றிலுமாகத் தீராது, எஞ்சி நின்றன. அதன் காரணமாக, அவர்கள் பூமியில் மீண்டும் பிறந்தனர். இதுவும் எம்பெருமானின் திருவுளமே!!..
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU.. PART 30..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.30 . கார்த்தவீர்யன் நற்கதி அடைதலும், கேரள உத்தாரணமும்! !..(பரசுராமாவதாரம்).
ஆயிரம் கரங்களுடையவன் கார்த்தவீர்யன்!. ஒரு சமயம் அவன் நர்மதை ஆற்றில் ஜலக்ரீடை செய்யும் பொழுது, அந்த நதிக்கரையில் பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் கர்வத்தை நீக்கும் பொருட்டு, ஆற்றின் போக்கை, தன் ஆயிரம் கரங்களினால் தடுத்து நிறுத்தி, ராவணனை ஆற்றில் மூழ்கி, தத்தளிக்குமாறு செய்தான். அத்தகைய பெருமை வாய்ந்த ஆயிரம் கரங்களினால், கார்த்தவீர்யன் எ ய்த அஸ்திர சஸ்திரங்களை பரசுராமர் எளிதாக அழித்தார். கார்த்தவீர்யன் ஏவிய விஷ்ணு சக்ரமும் பரசுராமரிடம் பயன்படாது போனது.
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 29...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.29.. கார்த்தவீர்யன் மதியிழந்தான்!..(பரசுராமாவதாரம்).
ஒரு சமயம், கார்த்தவீர்யார்ஜூனன், வேட்டைக்குச் சென்றிருந்த போது, வனத்தில், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில், காமதேனுவிடமிருந்து கிடைத்த பொருட்களால் நன்றாக உபசரிக்கப்பட்டான். பின் நகருக்குத் திரும்பிய அவனுக்கு, குணமற்ற மந்திரிகள் துர்போதனை செய்யவே, காமதேனுவை விலைக்கு வாங்க வேண்டி, ஒரு மந்திரியை அனுப்பினான். முனிவர் அதற்கு சம்மதிக்காததால், அவர் கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த காமதேனு, மந்திரியுடன் வந்திருந்த சேனையை அழித்தது. இருந்தாலும், அந்த மந்திரி, காமதேனுவின் கன்றுக்குட்டியை அபகரித்துச் சென்று விட்டான்.
KANNANAI NINAI MANAME...BAGAM IRANDU... PART 28. கண்ணனை நினை மனமே!!.. பகுதி.28..பரசுராமாவதாரம்!!.
சனி, 14 ஏப்ரல், 2018
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 27..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.27. ஆத்ம ஜோதியில் புகுந்தார்!.
வானரர்களால் பல திக்குகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட பாறைகளால் அணை கட்டி, ஸ்ரீராமர் இலங்கையை அடைந்தார்!. மரங்களும் குன்றுகளுமே ஆயுதங்களாகக் கொண்டு, வானரர்கள் போர் புரிந்தனர்!. ஸ்ரீ ராமர் தம் இளையவருடன் சேர்ந்து போர்க்களத்தில் தமது பராக்கிரமத்தைக் காண்பிக்கும் பொழுது, இந்திரஜித்தின் நாகாஸ்திரத்தால் கட்டுண்டு, பின், கருடனின் சிறகுகளால் வீசப்பட்ட காற்றுப் பட்டு, விரைவில் விடுவிக்கப்பட்டார்!. பின் நடந்த போரில், சக்தி ஆயுதத்தால் தாக்கப்பட்ட லக்ஷ்மணரின் சுவாசம் நின்று போக, பிறகு அவர், ஹனுமாரால் கொண்டு வரப்பட்ட ஔஷத மலையிலிருந்த சஞ்சீவினி மூலிகையால் பிராணனை அடைந்தார். மாயையின் பெருமையால் ஆணவம் கொண்டிருந்த இந்திரஜித்தை, லக்ஷ்மணர் முடித்தார்.
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU..PART 26..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.26. அன்னையைக் கண்டான்!..அக மகிழ்ந்தானே!!.
ஹனுமாரால் ஸ்ரீராமருக்கு, சுக்ரீவனுடன் தோழமை ஏற்பட்டது. துந்துபி என்ற அரக்கனின் மலை போன்ற எலும்புக் கூட்டை, தம் கால் கட்டை விரலால் உந்தி எறிந்தும், ஒரே பாணத்தால் ஏழு ஆச்சா மரங்களைத் துளைத்தும், ஸ்ரீராமர், சுக்ரீவனுக்கு தம் பலத்தின் மேலிருந்த ஐயத்தைப் போக்கினார். அவன் தமையனான வாலியை, மறைவாக இருந்து கொன்று விட்டு, சீதையின் பிரிவாற்றாமையால் வருத்தமுற்ற ஸ்ரீராமர், மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகில் மழைக் காலத்தைக் கழித்தார்.
KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU... PART 25...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.25. !.ராவண மாயை!!!.
பட்டத்திரி, சூர்ப்பனகையின் பிரவேசத்தைப் பற்றி அதிகம் விவரிக்கவில்லை.. புத்தி கெட்ட சூர்ப்பனகையின் வேண்டுகோள்களைப் பொறுக்க மாட்டாமல், அண்ணல் அவளை இளையவனிடம் அனுப்ப, பின் அவள் மூக்கறுபட்டதும், அவமானப்பட்ட சூர்ப்பனகையின் தூண்டுதலால் போருக்கு வந்த கர தூஷணர்கள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரக்கர்களை ஸ்ரீராமர் முடித்ததும் பட்டத்திரியால் சொல்லப்படுகிறது.
வெள்ளி, 6 ஏப்ரல், 2018
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 24...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.24.. வனமேகினார் அண்ணல்!..!.
ஸ்ரீராம சீதா கல்யாண மஹோத்சவம் நிறைவடைந்ததும், அங்கிருந்து அயோத்திக்குப் புறப்பட்ட ஸ்ரீராமரை, பரசுராமர் வழிமறித்தார். பின், தம் பலத்தை ஸ்ரீராமரிடம் அர்ப்பணம் செய்து விட்டுச் சென்றார். ஸ்ரீராமர், சீதையுடனும், தன் தந்தை, சகோதரர்கள், பரிவாரங்களுடனும் அயோத்தியை அடைந்தார்!!!.. அழகே உருவெடுத்த ஸ்ரீராமர், அங்கு, தன் மனங்கவர்ந்த மனையாளுடன் இன்புற்று வாழ்ந்து வந்தார். ஒரு சமயம், பரதன், சத்ருக்னனுடன் தன் மாமன் இல்லத்திற்குச் சென்ற வேளையில், தசரதரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீராம பட்டாபிஷேகம், கேகய மன்னனின் புதல்வியால் தடுக்கப்பட்டு நின்று விட்டது!!!!!..
KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU...PART 23..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.23.. ஸ்ரீராம ஜெய ராம!.
பட்டத்திரி, புருஷோத்தமரான ஸ்ரீராமரின் திவ்ய சரிதத்தை, அடுத்ததாகச் சொல்லத் துவங்குகிறார். அகண்டு பரந்து விளங்கும் அன்பெனும் சாகரத்தை, எவ்விதம் இருபது பாடல்களுள் அடக்க இயலும்?!.. ஆனால், பகவானின் திருவருள், எதையும் சாதிக்கும் வல்லமையுடையது!.. வாமனனின் திருவுருவே திரிவிக்ரமனாகவும் வளர்ந்தது!.. அது போல், இரு தசகங்களில், பவ சாகரத்தைத் தாண்டுவிக்கும் எம்பெருமானின் அவதார மகிமை பட்டத்திரியால் சொல்லப்படுகிறது!..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)