நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU.. PART 30..க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.30 . கார்த்தவீர்யன் நற்கதி அடைதலும், கேரள உத்தாரணமும்! !..(பரசுராமாவதாரம்).

Related image
ஆயிரம் கரங்களுடையவன் கார்த்தவீர்யன்!. ஒரு சமயம் அவன் நர்மதை ஆற்றில் ஜலக்ரீடை செய்யும் பொழுது, அந்த நதிக்கரையில் பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் கர்வத்தை நீக்கும்  பொருட்டு, ஆற்றின் போக்கை, தன் ஆயிரம் கரங்களினால் தடுத்து நிறுத்தி, ராவணனை ஆற்றில் மூழ்கி, தத்தளிக்குமாறு செய்தான். அத்தகைய பெருமை வாய்ந்த ஆயிரம் கரங்களினால்,  கார்த்தவீர்யன் ய்த அஸ்திர சஸ்திரங்களை பரசுராமர் எளிதாக அழித்தார். கார்த்தவீர்யன் ஏவிய விஷ்ணு சக்ரமும் பரசுராமரிடம் பயன்படாது போனது.

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 29...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.29.. கார்த்தவீர்யன் மதியிழந்தான்!..(பரசுராமாவதாரம்).

Related image
ஒரு சமயம், கார்த்தவீர்யார்ஜூனன், வேட்டைக்குச் சென்றிருந்த போது, வனத்தில்,  ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில், காமதேனுவிடமிருந்து கிடைத்த பொருட்களால் நன்றாக உபசரிக்கப்பட்டான்.  பின் நகருக்குத் திரும்பிய அவனுக்கு, குணமற்ற மந்திரிகள் துர்போதனை செய்யவே, காமதேனுவை விலைக்கு வாங்க வேண்டி, ஒரு மந்திரியை அனுப்பினான். முனிவர் அதற்கு சம்மதிக்காததால், அவர் கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த காமதேனு, மந்திரியுடன் வந்திருந்த சேனையை அழித்தது. இருந்தாலும், அந்த மந்திரி,  காமதேனுவின் கன்றுக்குட்டியை அபகரித்துச் சென்று விட்டான்.

KANNANAI NINAI MANAME...BAGAM IRANDU... PART 28. கண்ணனை நினை மனமே!!.. பகுதி.28..பரசுராமாவதாரம்!!.


Related image
ஸ்ரீ பரசுராமர் குறித்த நிகழ்வுகள், இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு பெருங்காவியங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. பட்டத்திரி, பரசுராமரின் அவதார நிகழ்வை, தத்தாத்ரேயரின் மகிமையைத் துதிப்பதிலிருந்து துவங்குகிறார்.