நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 13 டிசம்பர், 2017

KANNANAI NINAI MANAME!.. BAGAM IRANDU..PART 22...கண்ணனை நினை மனமே.. பகுதி 22..பக்தரின் பெருமை!!..(அம்பரீஷ சரிதம்).


துர்வாஸர் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார். ஸ்ரீபகவானை நோக்கி, அவரது பக்தருக்குத் தாம் இழைத்த அநீதிக்காக மன்னிப்புக் கோரினார். ஆனால் பகவானோ துர்வாஸரைப் பார்த்து, 'நான் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன், பக்தியால் என்னிடம் கட்டுண்ட பக்தர்கள் என்னை வசப்படுத்துகின்றனர். ஞானமும் தவமும் பணிவுடன் கூடியிருந்தாலே வணங்கத்தக்கதாகும். உமக்கு விளைந்த இந்தக் கெடுதலிலிருந்து விடுபட நீர் அம்பரீஷனையே சரணடையும்'  என்று திருவாய் மலர்ந்தருளினார்.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU....PART 21..கண்ணனை நினை மனமே.. பகுதி 21... பக்திக்கே வசப்படுவான் பரமாத்மா!..(அம்பரீஷ சரிதம்).

Related image

அரசராக இருந்த போதிலும், தன்னை பகவானது சேவகனாகவே கருதிக் கொள்ளும் அம்பரீஷர் , பகவத் பக்தியையே தனது பெரும்  செல்வம் என எண்ணியவர்.

KANNANAI NINAI MANAME...BAGAM IRADU.. PART..20..கண்ணனை நினை மனமே.. பகுதி 20...அம்பரீஷ சரிதம்.

Related image

பக்தி  என்பது பூர்வ புண்ணிய வசத்தாலேயே ஒருவருக்குக் கிடைக்கக் கூடியது. க‌டும் வெயிலில் குடை போல்,  இறைவன் மேல் வைக்கும் பக்தி, ஒருவருக்கு இவ்வுலக வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து காக்கும் கவசமாக அமையும். நம் கர்ம வினைகளின் பயனாக வரும் துன்பங்களின் வெம்மை நம்மை அதிகம் தாக்காதவாறும், நம் குண இயல்புகள் துன்பங்களைக் கண்டு மாறுபாடு அடையாதவாறும் காத்து நிற்பது பக்தியே.

'பக்தி: ஸித்தேர்-கரியஸீ' (பக்தி, சித்திகளை காட்டிலும் மேலானது) என்பது ஆன்றோர் வாக்கு.

KANNANAI NINAI MANAME....BAGAM IRADNU... PART..19..கண்ணனை நினை மனமே.. பகுதி 19. 'கொழுங்கயலாய்' அவதரித்த எம்பெருமான்!... (மச்சாவதாரம்).

Image result for macha avatharam

அரசனான சத்ய விரதரை, அவரது பக்தியினாலும், பற்றற்ற தன்மையினாலும், 'முனிவர்' என்றே குறிப்பிடுகிறார் பட்டத்திரி.

குளத்திலும், பின்பு ஏரியிலும் விடப்பட்ட மீன், அதை அடைத்துக் கொண்டு, மிகப் பெரும் உருவம் தாங்கி வளர்ந்தது என்று பார்த்தோம். பின் அது சமுத்திரத்தில் சேர்க்கப்பட்டது. பட்டத்திரி, முனிவரான சத்யவிரதர், மீனாகத் தோன்றியது பகவானே என்றறிந்திருந்தபடியால், பகவானின் கட்டளைப்படியே, தம்முடைய யோக மகிமையினால் அந்த மீனை, கடலுக்குக் கொண்டு சென்றார்  என்று  சொல்கிறார். 

புதன், 9 ஆகஸ்ட், 2017

KANNANAI NINAI MANAME.. BAGAM.. 2.. PART 18..கண்ணனை நினை மனமே.. பகுதி 18. சத்ய விரதனின் பக்தி!.. (மச்சாவதாரம்!)..

Image result for macha avatharam

'முன்பொரு சமயம், ஹயக்ரீவன் என்ற அசுரனால், பிரம்மாவிடமிருந்து வேதங்கள் அபகரிக்கப்பட்ட போது, பகவான் மீன் வடிவில் தோன்ற விரும்பினார்!' என்று  பகவானின் மச்சாவதாரத்தைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார் பட்டத்திரி!!..

KANNANAI NINAI MANAME..BAGAM 2. PART 17..கண்ணனை நினை மனமே.. பகுதி 17. உத்தம கதியை அடைந்தான் மஹாபலி!...(வாமனாவதாரம்!). !!.

Related image
மஹாபலியின் சிரத்தில் பகவான் தன் திருவடியை வைத்தருளிய தருணத்தில், அவனது பாட்டனாரான பிரகலாதன் அவ்விடத்தில் நேரில் தோன்றினார். பகவானை, பலவாறு போற்றித் துதி செய்தார்!!..'புத்தியை மயக்கும் செல்வத்தை இவனிடமிருந்து பிரித்தது, இவனுக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம்' என்று பகவானைப் போற்றினார். பின், தன் பேரனது பாக்கியத்தை எண்ணிப் பூரித்தார்!. . 'இந்த அருளை, பிரம்மா, ருத்ரன், ஸ்ரீ லக்ஷ்மி தேவி முதலியோரும் அடையவில்லை' என்று பிரகலாதன் தன் துதியில் கூறியதை, ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

செவ்வாய், 25 ஜூலை, 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM.. PART 16..கண்ணனை நினை மனமே.. பகுதி 16. வாமனாவதாரம்!!!.திரிவிக்ரமனின் திருவுரு!..

Image result for lord thirivikrama
பகவானுடைய திவ்ய ரூபம், பிரம்மாண்டத்தையும் தாண்டி, மேலும் மேலும் வளர்ந்தது..

பகவான் த்ரிவிக்ரம ஸ்வரூபனாகி, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்தருளினான்.

KANNANAI NINAI MANAME... IRANDAM BAGAM..PART 15..கண்ணனை நினை மனமே.. பகுதி 15. வாமனாவதாரம்!...மூன்றடி மண்!..!..


Image result for lord trivikrama
பகவானை யாரென்று அறியாமலே, வரவேற்று பூஜித்த பலி, பின்னர் கரங்களைக் கூப்பிக் கொண்டு, 'அந்தண குமாரா!, என்னிடமிருந்து நீ வேண்டுவது யாதாயினும் கூறு.. அன்னமோ, வீடோ, பூமியோ, எதுவானாலும், அனைத்தையுமே நீ கேட்டாலும், நான் உனக்குத் தருவேன்!!' என்று கூறினான்.

புதன், 21 ஜூன், 2017

KANNANAI NINAI MANAME.. IRADAM BAGAM.. PART 14..கண்ணனை நினை மனமே.. பகுதி 14. வாமனாவதாரம்!!!.Image result for vamanavataram images

பகவான், புண்ணியம் மிகுந்த அந்த ஆசிரமத்தில் அவதரித்ததும், தேவர்கள், ஆனந்தத்துடன் வாத்தியங்களை முழக்கினார்கள்!.. பூமாரி பொழிந்தார்கள்!.. காசியபரும், அதிதி தேவியும், ஜய கோஷம் செய்தார்கள்!.. இவ்விதம் இருக்க, பகவான், நொடியில், பிரம்மச்சாரியின் உருவத்தை எடுத்துக் கொண்டார்!!!!!..

KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM..PART 13.. கண்ணனை நினை மனமே.. பகுதி 13. வாமனாவதாரம்!!!.

Image result for vamanavataram images

அடுத்ததாக, வாமனாவதாரத்தைச் சொல்லத் துவங்கும் பட்டத்திரி, முதலில், பலியின் சரிதத்தைச் சொல்கிறார். எவ்வாறு அவன் பலம் மிகுந்தவனாக, அனைத்துலகத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டான் என்றும் சொல்கிறார்.

செவ்வாய், 23 மே, 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM.. PART.12..கண்ணனை நினை மனமே.. பகுதி 12..அமுதம் வழங்கிய ஆரா அமுதன் ( மோஹினி அவதாரம்!).


Related image
மோஹினியின் உருவின் இருந்த பகவான், தன் பக்தர்களிடம் பேரன்பு பூண்டவராதலால், தேவர்களின் வரிசையிலேயே அமுதத்தை பரிமாறிக் கொண்டிருக்கும் போது, இதை உணர்ந்த ஸ்வர்ப்பானு என்ற அசுரன், தேவனைப் போல் உருவெடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்து, அமுதத்தைப் பெற்றான். அமுதத்தைப் பாதி குடித்திருந்த நிலையில், பகவான், தன் சுய உருவில் தோன்றி, அவன் சிரத்தை, தன் சக்கரத்தால் துண்டித்தார்.

ஞாயிறு, 21 மே, 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM..PART 11..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்...பகுதி 11... மோஹினி அவதாரம்..!

Image result for mohini avatar

தன்வந்திரியாகத் தோன்றிய‌   பகவானிடமிருந்த அம்ருத கலசத்தை, அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இதைக் கண்டு கலங்கிய தேவர்களை பகவான் சமாதானம் செய்தார். உடனே அங்கிருந்து  மறைந்தார்!!..

அங்கே திடீரென்று சியாமள வர்ணமுடைய, இளமையான, அழகே உருவெடுத்து வந்தது போன்ற தோற்றமுடைய பெண்ணொருத்தி தோன்றினாள்!..பேரழகு வாய்ந்த அவளைக் கண்ட அசுரர்கள், மோகத்தால் மதியிழந்து, அவளை நோக்கி வந்தார்கள்!..

திங்கள், 17 ஏப்ரல், 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM ..PART 10.கண்ணனை நினை மனமே!..இரண்டாம் பாகம்.. பகுதி 10.

Image result for God dhanvantari


இன்னின்ன செயல்களைச் செய்தால், திருமகள் நிலைத்திருப்பாள் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. சோம்பலகற்றி சுறுசுறுப்புடன் செயல்படுபவர்கள், நல்லதையே நினைத்து, நன்மையையே செய்பவர்கள் தூய்மையான, அழகு நிரம்பிய பொருட்கள்,   , இன்னும்..இன்னும்.. சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் நீளும். 

வியாழன், 23 மார்ச், 2017

KANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM.. PART 9..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. பகுதி 9. திருமகள் அவதரித்தாள்!!!..

Related image

பகவானின் கிருபையால், திருப்பாற்கடலைக் கடைவது   தொடர்ந்து நடைபெற்று வந்த போது, அக்னியின் ஜ்வலிப்புடன் கூடிய காலகூட விஷம், கடலில் இருந்து முதலில் வெளி வந்தது...தேவர்களுடைய வேண்டுகோளுக்காகவும், பகவானின் ப்ரீதிக்காகவும் பரமேச்வரன், அந்த விஷத்தை அருந்தி விட்டார்!..

KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM.. PART 8...கண்ணனை நினை மனமே!.. இரண்டாம் பாகம்.. பகுதி..8.

Image result for amrutha mathanam

சென்ற பகுதியில், பகவான் கூர்மாவதாரம் எடுத்த நிகழ்வு கூறப்பட்டது. இந்தப் பகுதியில், பகவான், அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருந்து இயக்கும் தத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது.. நடப்பவை எல்லாம் பகவானின் லீலா விநோதங்களே என்னும் கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது.. மனக் கவலைகள் நீங்க, இந்தப் பகுதியைப் படித்தல் மருந்தாகும் என்பது பெரியோர்கள் கருத்து..

திங்கள், 30 ஜனவரி, 2017

KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM.. PART 7..கண்ணனை நினை மனமே.. பாகம்..2.. பகுதி 7... திருப்பாற்கடல் கடைதலும்.. கூர்மாவதாரமும்.

Image result for amrutha mathanam

ஒரு சமயம்,  ஒரு அப்சர ஸ்திரீ, தனக்குக் கிடைத்த தெய்வப் பிரசாதமான ஒரு மாலையை, துர்வாச மஹரிஷிக்குக் கொடுத்தாள். அவர், அதை தேவேந்திரனுக்கு அளித்தார். அந்த நேரத்தில் தேவேந்திரன், ஐராவதத்தின் மேல் வீற்றிருந்தான். மாலையின் மகிமையை உணராமல், அவன் அதை, ஐராவதத்தின் தலையில் வைக்க, அது, அந்த மாலையை கீழே தள்ளி மிதித்து விட்டது!!!!!.. கடுங்கோபம் கொண்ட மஹரிஷி, இந்திரனை சபித்து விட்டார்.

KANNANAI NINAI MANAME... IRANDAM BAGAM.. PART 6...கண்ணனை நினை மனமே!!!.. பாகம் 2... பகுதி...6. கஜேந்திர மோட்சம்..

Image result for paramapada nathan

​ஸ்ரீமத் பாகவதம்,  'கஜேந்திரன், பகவானின் அனுக்கிரகத்தால், மஞ்சள் பட்டு அணிந்து, நான்கு புஜங்களை உடையவனாக, அஞ்ஞான இருள் முற்றிலும் நீங்கிய  சாரூப்ய (பகவானின் திருவுருவடைதல்) நிலையை அடைந்தான்' என்கிறது