நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

KANNANAI NINAI MANAME... PART 50...கண்ணனை நினை மனமே!...பகுதி 50.பிரஹலாத சரித்திரம்!..( தொடர்ச்சி..).


தூணிலிருந்து வெளிப்பட்ட, பகவானின் நரசிம்ம ஸ்வரூபத்தைக் கண்டதும், ஹிரண்யன், ' இது நிச்சயமாக விஷ்ணுதான்' என்று உறுதி கொண்டு, தன் கதையை எடுத்துக் கொண்டு, தாக்குவதற்கு ஓடினான். பகவான், அவனைத் தம் கரங்களால் பிடித்தார். ஆயினும் அவன் நழுவி விட்டான்!.. அதன் பின்னரும், வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, அதில் தன்னுடைய விசித்திரமான திறமைகளைக் காட்டியவாறு, மீண்டும் தாக்குவதற்கு ஓடி வந்தான்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

KANNANAI NINAI MANAME.... PART 49...கண்ணனை நினை மனமே!...பகுதி 49..பிரஹலாத சரித்திரம்!..( தொடர்ச்சி..).பலவாறு பிரஹலாதனைத் துன்பப்படுத்திய ஹிரண்யகசிபு, அதனாலெல்லாம் அவன் மனங்கலங்காதிருக்கவே, என்ன செய்வதென்று தெரியாமல், குருவின் சொல்படி, வருண பாசத்தால், குருவின் வீட்டிலேயே பிரஹலாதனைக் கட்டி வைத்தான்..

KANNANAI NINAI MANAME...PART 48...கண்ணனை நினை மனமே!...பகுதி 48..பிரஹலாத சரித்திரம்!..

பகவான், வராக அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷனை வதம் செய்த போது, அவனுடைய சகோதரனான ஹிரண்யகசிபு, 'என் சகோதரனைக் கொன்ற விஷ்ணுவை வதம் செய்வேன்!' என்று அசுரர்களின் கூட்டத்தில் சபதமெடுத்தான். சபதத்தை நிறைவேற்றுவதற்காக, பிரம்ம தேவரைக் குறித்துத் தவம் செய்து, தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டின் உள்ளேயோ வெளியிலோ, எந்த விதமான ஆயுதங்களாலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ தனக்கு மரணம் நேரக்கூடாதென வரம் வேண்டிப் பெற்றான்.