வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை, வண்டியை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்தாள். வீட்டினுள், ஆடலும் பாடலுமாக, சத்தமாக இருக்கும் சூழல், குழந்தையின் நிம்மதியான நித்திரையைக் கெடுக்கக் கூடுமென்று, வீட்டுக்கு வெளியே, வண்டியினடியில் குழந்தையைப் படுக்க வைத்து விட்டு, குழந்தைக்குக் காவலாக சில சிறுவர்களையும் வண்டியருகில் அமர வைத்தாள்!..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
திங்கள், 21 ஜனவரி, 2019
KANNANAI NINAI MANAME... BAGAM IRANDU.. PART 38...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.38. கோவிந்தம் பரமானந்தம்!
எம்பெருமானை நினைத்து, அவனையே புகழ்ந்து போற்றுவது அவனிடத்தில் மாறாத பக்தி கொண்ட அடியார்களுக்கு மட்டில்லா ஆனந்தத்தைத் தரும் போது, அந்த பகவானுடனேயே இருக்கும் பெரும் பேறு தரும் ஆனந்தத்தை எவ்விதம் சொல்வது?.. பேரானந்தம் அதுவே அல்லவா!!!... அத்தகையதொரு பேரானந்தத்தை, தம் தவப் பயனால் எய்திய கோப கோபியரின் பாக்கியத்தை எப்படித் துதிப்பது?!..
செவ்வாய், 8 ஜனவரி, 2019
KANNANAI NINAI MANAME... BAGAM IRANDU... PART...37..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.37. பெருவாழ்வு எய்தினாள்!!.
இடியோசையை ஒத்த ஒரு பெரும் கதறல் பூதனையிடமிருந்து வெளிப்பட்டது!!. பயங்கரமான தன் சுய உருவை அடைந்து, இரு கரங்களையும் விரித்துக் கொண்டு, மல்லாந்து நிலத்தில் வீழ்ந்தாள் பூதனை!!..
ஞாயிறு, 6 ஜனவரி, 2019
KANNANAI NINAI MANAME..BAGAM IRANDU.. PART 36...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.36 பூதனை !!.
மனதில் தோன்றும் எண்ணங்கள், விருப்பங்கள் குறித்துக் கவனமுடன் இருக்க வேண்டுமெனக் கூறாத பெரியோர்களோ, அறநூல்களோ இல்லை!!.. ஆயினும் மனிதன் அவ்விதம் நடக்கிறானா??!!.. அதுவும், மண்ணில் பிறவிகள் தொடரும் போது, ஒரு பிறவியில் மனதில் தோன்றும் விருப்பங்கள், அவற்றின் வலிமையால், தொடரும் பிறவிகளில் இறையருளால் நிறைவேறுகின்றன. அவை நல்லவையாக இருந்தால் எல்லோருக்கும் நலம்!!..இல்லாமல் போனாலோ....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)