நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 31 டிசம்பர், 2016

KANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM..PART 5.. கண்ணனை நினை மனமே... பாகம் 2...பகுதி 5.. கஜேந்திர மோட்சம்..

Image result for gajendra moksha

யாரொருவர் தன் சக்தியின் எல்லையை உணர்ந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை ஆபத்துக்காலத்தில் பரிபூரணமாகச் சரணடைகிறார்களோ அவர்களை பக்தவத்ஸலனான எம்பெருமான் நிச்சயம் வந்து காப்பாற்றுகிறான். பாரதக்கதையில் திரௌபதி, தன் இருகரங்களையும் கூப்பி தீனரட்சகனான பரம்பொருளை முழுமையாகச் சரணடைந்தபோது, வற்றாது புடவை சுரந்து அவள் மானம் காத்த பரமதயாளனின் கருணைக்கு அளவேது?.


சனி, 17 டிசம்பர், 2016

MY THIRD E-BOOK...என் மூன்றாவது மின்னூல்... 'திருவெம்பாவை (உரையுடன்).'.

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!..

மின் தமிழ் குழுமத்தில் முன்பு நான் எழுதிய, திருவெம்பாவை, (பொருளுரையுடன்) இன்று மின்னூல் வடிவம் பெற்றிருக்கிறது...இதனை, களக்காடு திருத்தலத்தில் கோயில் கொண்டருளும், அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீ சத்தியவாகீசுவர ஸ்வாமியின் திருவடிகளில் பணிவோடு சமர்ப்பணம் செய்து வணங்குகிறேன்.

வியாழன், 24 நவம்பர், 2016

KANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM..PART 4.. கண்ணனை நினை மனமே... பாகம் 2...பகுதி 4.. கஜேந்திர மோட்சம்..

Image result for lord krishna images, gajendra moksha


கஜேந்திரனின் நிர்குண பரப்பிரம்ம ஸ்தோத்திரம், ஸ்ரீமத் பாகவதத்தில் தரப்பட்டுள்ளது.. மிக உயர்வாக இந்த ஸ்துதியைப் போற்றுகிறது ஸ்ரீமத் பாகவதம்..  இந்த ஸ்தோத்திரத்தின் பொருளை சுருக்கமாகத் தருகிறேன். நிர்க்குண நிராகார பரம்பொருளை போற்றுவதான இந்தத் துதி, மிகவும் மகிமை வாய்ந்தது. அனைத்துத் துன்பங்களையும் நீக்க வல்லது.

சனி, 22 அக்டோபர், 2016

KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM... PART 3...கண்ணனை நினை மனமே.. பாகம் 2.. பகுதி 3.

Image result for gajendra moksham

பகவானை அடைய வேண்டுமெனில் மனதை ஒருமைப்படுத்தி, பகவானின் திருவடிகளில் பக்தி செலுத்த வேண்டும்.... ஆனால், ஆயிரம் வழிகளில் அலையும் மனதை அடக்கி, பகவான் மேல் திருப்புவது அத்தனை எளிதான செயலா??!!.. மஹாத்மாக்களால் மட்டுமே முடிந்த இந்த விஷயத்தை, மற்றவர்களும் ஓரளவுக்கேனும் சாதிக்கும் பொருட்டே பகவான் துன்பத்தைத் தருகிறான்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

KANNANAI NINAI MANAME....IRANDAM BAGAM... PART 2. GAJENDRA MOKSHAM. . கண்ணனை நினை மனமே!.. பகுதி...2. கஜேந்திர மோட்சம்.


Image result for gajendra moksham


சாபத்தின் காரணமாக, யானையாகப் பிறவி எடுத்த இந்திரத்யும்னன், கஜேந்திரன் என்ற பெயருடன் விளங்கினான்

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

MY SECOND E-BOOK..என் இரண்டாவது மின்னூல்... 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய, 'திருப்பொன்னூசல்‍' -பொருளுரை'..

இறையருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் என் இரண்டாவது மின்னூல், 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்' -பொருளுரை' இன்று வெளியீடு காண்கிறது..அன்பு நண்பர்களின் ஆதரவையும் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்..

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

KANNANAI NINAI MANAME... IRANDAAM BAGAM....PART 1..GAJENDRA MOKSHAM..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்...பகுதி..1. கஜேந்திர மோட்சம்..

Image result for gajendra moksham images
வணக்கம்!..

'கண்ணனை நினை மனமே'...முதல் பாகம், நரசிம்மாவதாரத்தோடு நிறைவடைந்தது.. இரண்டாம் பாகம், 'கஜேந்திர மோட்ச'த்திலிருந்து,   துவங்குகிறது.. கண்ணனின் கனிவான கருணையை வேண்டிப் பிரார்த்தித்துக் கொண்டு,  தங்கள் அனைவரின் நல்லாதரவும்  இந்தத் தொடருக்கு இருக்குமென்ற நம்பிக்கையில்,  தொடர்கிறேன்..பிழைகள் இருக்குமாயின், தவறாது சுட்டிக் காட்டி, என்னை வழி நடத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

KANNANAI NINAI MANAME... PART 50...கண்ணனை நினை மனமே!...பகுதி 50.பிரஹலாத சரித்திரம்!..( தொடர்ச்சி..).


தூணிலிருந்து வெளிப்பட்ட, பகவானின் நரசிம்ம ஸ்வரூபத்தைக் கண்டதும், ஹிரண்யன், ' இது நிச்சயமாக விஷ்ணுதான்' என்று உறுதி கொண்டு, தன் கதையை எடுத்துக் கொண்டு, தாக்குவதற்கு ஓடினான். பகவான், அவனைத் தம் கரங்களால் பிடித்தார். ஆயினும் அவன் நழுவி விட்டான்!.. அதன் பின்னரும், வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, அதில் தன்னுடைய விசித்திரமான திறமைகளைக் காட்டியவாறு, மீண்டும் தாக்குவதற்கு ஓடி வந்தான்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

KANNANAI NINAI MANAME.... PART 49...கண்ணனை நினை மனமே!...பகுதி 49..பிரஹலாத சரித்திரம்!..( தொடர்ச்சி..).



பலவாறு பிரஹலாதனைத் துன்பப்படுத்திய ஹிரண்யகசிபு, அதனாலெல்லாம் அவன் மனங்கலங்காதிருக்கவே, என்ன செய்வதென்று தெரியாமல், குருவின் சொல்படி, வருண பாசத்தால், குருவின் வீட்டிலேயே பிரஹலாதனைக் கட்டி வைத்தான்..

KANNANAI NINAI MANAME...PART 48...கண்ணனை நினை மனமே!...பகுதி 48..பிரஹலாத சரித்திரம்!..





பகவான், வராக அவதாரமெடுத்து, ஹிரண்யாக்ஷனை வதம் செய்த போது, அவனுடைய சகோதரனான ஹிரண்யகசிபு, 'என் சகோதரனைக் கொன்ற விஷ்ணுவை வதம் செய்வேன்!' என்று அசுரர்களின் கூட்டத்தில் சபதமெடுத்தான். சபதத்தை நிறைவேற்றுவதற்காக, பிரம்ம தேவரைக் குறித்துத் தவம் செய்து, தேவர்களாலோ, மனிதர்களாலோ, விலங்குகளாலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டின் உள்ளேயோ வெளியிலோ, எந்த விதமான ஆயுதங்களாலோ, பூமியிலோ, ஆகாயத்திலோ தனக்கு மரணம் நேரக்கூடாதென வரம் வேண்டிப் பெற்றான்.

புதன், 13 ஜனவரி, 2016

KANNANAI NINAI MANAME.. PART 47..கண்ணனை நினை மனமே!...பகுதி 47...சித்ரகேது உபாக்கியானம்... (தொடர்ச்சி..).​


சித்ரகேது, நாரதரால் மந்திர உபதேசம் அருளப் பெற்றான். ஆதிசேஷ ஸ்வரூபனான பகவானை திருப்தி அடையச் செய்ய வல்ல ஸ்தோத்திரத்தையும் பெற்றான். அவற்றின் மூலம், ஒருமுகமான மனதுடன் பகவானை நினைத்துத் தவம் புரிந்தான். அவனது தவம் ஏழு நாட்களில் மிகச் சிறந்த பலனை அளித்தது. வித்யாதரர்களுக்கு அதிபதியாகும் நிலையை அடைந்தான். ஆயினும், குறையாத பக்தியுடன் பகவானை சேவித்து வந்தான்.

KANNANAI NINAI MANAME.. PART 46..கண்ணனை நினை மனமே!...பகுதி 46...சித்ரகேது உபாக்கியானம்...



ஸ்ரீமந் நாராயணீயம், பகவானின் லீலைகளுடன் கூட, பிரசித்தி பெற்ற சில வம்சத்தவர்களின் கதைகளையும் சொல்லி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.  இந்த வம்சத்தவர்களின் கதைகளைச் சொல்லி வருகையில், பகவானின் லீலா விநோதங்கள் இவற்றுடன் இரண்டறக் கலந்திருப்பதையும்  ந‌ம்மால் உணர முடியும்.