அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!
'மின் தமிழ்' குழுமத்தில், 'கிராம தேவதைகள்' இழையில், ப.கருங்குளம் அருள்மிகு பறைநாச்சியம்மன்(பரநாச்சியம்மன்) குறித்து நான் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..
கோயில் அமைந்திருக்கும் இடம்:
இந்தக் கோயில், காரைக்குடி அருகே பட்டமங்கலம் கிராமத்திற்கருகில் அமைந்திருக்கிறது. திருப்பத்தூ ர், மற்றும் கல்லலில் இருந்து பஸ் வசதி உண்டு.
கோயிலின் முக்கிய அம்சங்கள்:
1. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.
2. மிகக் குறைந்த அளவே உயரமுள்ள நுழைவாயில்.