நட்பாகத் தொடர்பவர்கள்

சனி, 17 டிசம்பர், 2016

MY THIRD E-BOOK...என் மூன்றாவது மின்னூல்... 'திருவெம்பாவை (உரையுடன்).'.

அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!..

மின் தமிழ் குழுமத்தில் முன்பு நான் எழுதிய, திருவெம்பாவை, (பொருளுரையுடன்) இன்று மின்னூல் வடிவம் பெற்றிருக்கிறது...இதனை, களக்காடு திருத்தலத்தில் கோயில் கொண்டருளும், அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை ஸ்ரீ சத்தியவாகீசுவர ஸ்வாமியின் திருவடிகளில் பணிவோடு சமர்ப்பணம் செய்து வணங்குகிறேன்.

இதனை மின்னூலாக்கம் செய்தளித்த, திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி!.

இதை, மின் தமிழில் எழுதுவதற்கு மிகவும் ஊக்கமளித்த பலருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். சகோதரர் திரு.உதயன் அவர்களின் கைவண்ணத்தில், கோலங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. மார்கழியின் சிறப்பு!..

'திருவெம்பாவை'க்கு உரை தருவதை பெரியோர்கள் மிகப் பலர் செய்திருக்கிறார்கள்.. அவர்கள் சொல்லாத பொருளில்லை.. 'அதை மீறி நாம் என்ன சொல்லிவிடப் போகிறோம்' என்ற அச்சம் நிச்சயமாக எனக்கு முதலில் இருந்தது. ஆயினும், பெரியோர்கள் அனைவரும் தந்த நல்லாதரவு நான் எதிர்பாராதது..  

இதில் நானறிந்த, எனக்குக் கூறப்பட்ட, நான் உணர்ந்த சில கருத்துக்களையே சொல்லியிருக்கிறேன்.. இது 'அவன் அருளால் அவன் தாள் வணங்குதல்' போன்று சிவனருளால் செய்யப்படும் இறைபணி. என் பெயரில் வரும் கருத்துக்கள் என்னைச் சேர்ந்தவையாகவே இருப்பது இயல்பு..  இந்தக் கருத்துக்களில் ஏதேனும்  பிழையிருக்குமெனில் மனமார்ந்த மன்னிப்பைக் கோருகிறேன்..

நூலை தரவிறக்கிப் படிக்க.

இது என் மூன்றாவது மின்னூல். அன்பர்களின் நல்லாசியையும் ஆதரவையும் தொடர்ந்து வேண்டுகிறேன்!.

வெற்றி பெறுவோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2 கருத்துகள்:

  1. வெற்றிகரமான மூன்றாவது மின்னூல் வெளியீட்டுக்குப் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். தங்களின் இதுபோன்ற இறைப்பணிகள் தொடரட்டும். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது தொடர்ந்த ஊக்கத்திற்கும் நல்லாசிகளுக்கும் என் பணிவான நன்றி!.

      நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..