
ஆயிரம் கரங்களுடையவன் கார்த்தவீர்யன்!. ஒரு சமயம் அவன் நர்மதை ஆற்றில் ஜலக்ரீடை செய்யும் பொழுது, அந்த நதிக்கரையில் பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் கர்வத்தை நீக்கும் பொருட்டு, ஆற்றின் போக்கை, தன் ஆயிரம் கரங்களினால் தடுத்து நிறுத்தி, ராவணனை ஆற்றில் மூழ்கி, தத்தளிக்குமாறு செய்தான். அத்தகைய பெருமை வாய்ந்த ஆயிரம் கரங்களினால், கார்த்தவீர்யன் எய்த அஸ்திர சஸ்திரங்களை பரசுராமர் எளிதாக அழித்தார். கார்த்தவீர்யன் ஏவிய விஷ்ணு சக்ரமும் பரசுராமரிடம் பயன்படாது போனது.