நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

சிவராத்திரி விரதம்


நமது அன்றாட வாழ்வில்,  நாம் அடைய வேண்டிய செல்வங்களுள் முக்கியமானவை உடல் நலனும் மன நலனும் ஆகும். விரதங்களை அனுஷ்டிப்பதன் மூலம் இவை இரண்டையும் நாம் பெறலாம். மேலும் மனிதப் பிறவியின் பலனை அடையவும் விரதங்கள் வழி வகுக்கின்றன.

விரதம் என்றால் 'உணவு உண்ணாமல் இருத்தல்' என்பது மட்டுமே நம்மில் பலர் அறிந்தது. ஆனால் விரதம் என்பது அது மட்டும் அல்ல. விரதம் அனுஷ்டிப்பவர்கள், 

1.அதிகாலையில் குளித்த பின், பூஜையறையில்,இறைவன் திருமுன்,விரதத்தை அனுஷ்டிக்க தனக்கு சக்தியளிக்குமாறு வேண்டி நமஸ்கரிக்கவேண்டும். இது 'சங்கல்பம் செய்வது' எனப்படும். 

2. பெண்கள்,கணவன் அனுமதியுடன் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். 

3. முழுப் பட்டினி இருக்க முடியாதவர்கள், பால், பழம், பயத்தங்கஞ்சி,சத்துமாவு(வெல்லம் கலந்தது) முதலியவற்றை உண்ணலாம். 

4. அடிக்கடி நீர் அருந்தக் கூடாது. 

5.கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

6.அதிகம் பேசாமலும், இறைவன் நாமத்தை மனதுக்குள் உச்சரித்தவாறும் இருக்க வேண்டும். 

7.பகலில் உறங்கக் கூடாது. 

8.உண்மையே பேச வேண்டும். 

சிவராத்திரி விரதமும் பூஜையும், இகபர சுகங்களை வேண்டுவோர் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியதாகும். சிவராத்திரி விரதக்கதை, நம்மில் பலர் அறிந்ததே. அன்று,விரதம் இருப்போர் மேற்கூறிய யாவையும் கடைப்பிடிக்கவேண்டும். மேலும், 

1. சிவாலய தரிசனமும் சிவனுக்கு அபிஷேகப் பொருள்கள் சமர்ப்பித்தலும் மிக முக்கியம். 

2.முடிந்தால் வீட்டில், மாலை வேளையில் சிவபூஜை செய்யலாம். குலதெய்வமாக சிவனை வழிபடுபவர்கள் கட்டாயம் சிவபூஜை செய்யவேண்டும். 

3. நிவேதனத்திற்கு பாசிப்பருப்பு பாயசம்,  வேக வைத்து,வெல்லம் ஏலக்காய் சேர்த்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முதலியவை விசேஷம். வேண்டும் மற்ற நைவேத்தியங்களும் வைத்து வழிபாடு செய்யலாம். 

5. இரவு முழுக்க கண் விழித்து, சிவ ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்ய வேண்டும். டி.வி. பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. 

6. உற்றார்,உறவினர்கள்,நண்பர்களை பூஜையில் பங்கு பெற அழைத்து, பிரசாதம் வழங்கலாம். 

7. சிவபுராணம்,தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ரம், முதலியவற்றை  வீடுகளிலோ, கோவில்களிலோ பலர் சேர்ந்து பாராயணம் செய்வது சிவனருளைப் பலருக்குப் பெற்றுத்தரும். 

8. விரதம் இருக்க முடியாதவர்கள், கூடுமானவரை, உணவு (meals), உண்ணாமல், பலகாரங்கள்(உப்புமா போன்றவை) உண்ணலாம்.

குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கு, நம் கலாச்சாரத்தைப் பற்றியும், விரதம் அனுஷ்டிப்பதன் காரணங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறுவது, பக்தியையும், பண்பாட்டையும் வளர்க்க உதவும்.

20.2.2012, திங்கள், சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து, சிவனருள் பெறலாம்.

வெற்றி பெறுவோம்!

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..