மோஹினியின் உருவின் இருந்த பகவான், தன் பக்தர்களிடம் பேரன்பு பூண்டவராதலால், தேவர்களின் வரிசையிலேயே அமுதத்தை பரிமாறிக் கொண்டிருக்கும் போது, இதை உணர்ந்த ஸ்வர்ப்பானு என்ற அசுரன், தேவனைப் போல் உருவெடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்து, அமுதத்தைப் பெற்றான். அமுதத்தைப் பாதி குடித்திருந்த நிலையில், பகவான், தன் சுய உருவில் தோன்றி, அவன் சிரத்தை, தன் சக்கரத்தால் துண்டித்தார்.
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
செவ்வாய், 23 மே, 2017
ஞாயிறு, 21 மே, 2017
KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM..PART 11..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்...பகுதி 11... மோஹினி அவதாரம்..!

தன்வந்திரியாகத் தோன்றிய பகவானிடமிருந்த அம்ருத கலசத்தை, அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இதைக் கண்டு கலங்கிய தேவர்களை பகவான் சமாதானம் செய்தார். உடனே அங்கிருந்து மறைந்தார்!!..
அங்கே திடீரென்று சியாமள வர்ணமுடைய, இளமையான, அழகே உருவெடுத்து வந்தது போன்ற தோற்றமுடைய பெண்ணொருத்தி தோன்றினாள்!..பேரழகு வாய்ந்த அவளைக் கண்ட அசுரர்கள், மோகத்தால் மதியிழந்து, அவளை நோக்கி வந்தார்கள்!..
திங்கள், 17 ஏப்ரல், 2017
KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM ..PART 10.கண்ணனை நினை மனமே!..இரண்டாம் பாகம்.. பகுதி 10.

இன்னின்ன செயல்களைச் செய்தால், திருமகள் நிலைத்திருப்பாள் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. சோம்பலகற்றி சுறுசுறுப்புடன் செயல்படுபவர்கள், நல்லதையே நினைத்து, நன்மையையே செய்பவர்கள் தூய்மையான, அழகு நிரம்பிய பொருட்கள், , இன்னும்..இன்னும்.. சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் நீளும்.
வியாழன், 23 மார்ச், 2017
KANNANAI NINAI MANAME...IRANDAM BAGAM.. PART 9..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்.. பகுதி 9. திருமகள் அவதரித்தாள்!!!..

பகவானின் கிருபையால், திருப்பாற்கடலைக் கடைவது தொடர்ந்து நடைபெற்று வந்த போது, அக்னியின் ஜ்வலிப்புடன் கூடிய காலகூட விஷம், கடலில் இருந்து முதலில் வெளி வந்தது...தேவர்களுடைய வேண்டுகோளுக்காகவும், பகவானின் ப்ரீதிக்காகவும் பரமேச்வரன், அந்த விஷத்தை அருந்தி விட்டார்!..
KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM.. PART 8...கண்ணனை நினை மனமே!.. இரண்டாம் பாகம்.. பகுதி..8.

சென்ற பகுதியில், பகவான் கூர்மாவதாரம் எடுத்த நிகழ்வு கூறப்பட்டது. இந்தப் பகுதியில், பகவான், அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருந்து இயக்கும் தத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது.. நடப்பவை எல்லாம் பகவானின் லீலா விநோதங்களே என்னும் கருத்து உறுதிப்படுத்தப்படுகிறது.. மனக் கவலைகள் நீங்க, இந்தப் பகுதியைப் படித்தல் மருந்தாகும் என்பது பெரியோர்கள் கருத்து..
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)