இந்த தசகத்தில், பிரசேதஸர்களுக்கு தக்ஷன் புத்திரனாக பிறந்த சரிதம் கூறப்படுகிறது. ப்ருதுவின் கொள்ளுப் பேரனான ப்ராசீன பர்ஹிஸ் என்பவனுக்கும் சதத்ருதி என்ற பெண்ணுக்கும் பிறந்த பத்து புதல்வர்களே பிரசேதஸர்கள்.. இவர்களை பட்டத்திரி, 'எம்பெருமானின் கருணையின் முளைகள் போன்றவர்களும் நல்ல புத்திசாலிகளுமான பிரசேதஸர்கள்' என்று புகழ்ந்துரைக்கிறார்.
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
புதன், 26 ஆகஸ்ட், 2015
புதன், 19 ஆகஸ்ட், 2015
கொஞ்சம் அல்ல.. நிறையவே வருத்தம்!...
உண்மையில் இந்தப் பதிவினை எழுத நிறையவே வருத்தமாக இருக்கிறது... ஆயினும் சொல்லித் தான் ஆக வேண்டிய நிலை.. 'ஆலோசனை'யில் வெளிவந்த 'சுமங்கலிப் பிரார்த்தனை' பதிவுகள், வரிக்கு வரி, கீழ்க்கண்ட தளத்தில் காபி செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.. 'ஆலோசனை' பதிவுகளின் நிறைவில் இடம் பெறும், 'வெற்றி பெறுவோம்!' முதற்கொண்டு காபி செய்திருக்கிறார்கள்.
'ஆலோசனையில்' இரண்டு பகுதிகளாக வெளிவந்ததை,
ஒரே பகுதியாக வெளியிட்டிருக்கிறார்கள். வெளியிடுவோர், வெளியிடும் முன்பாக அனுமதி பெற்றுச் செய்திருக்க வேண்டும். அல்லது.. 'நன்றி' என்று சொல்லி, தளத்தின் முகவரி கொடுத்திருக்கலாம். இரண்டும் செய்யாதது மட்டுமல்ல..நான் அங்கு குறிப்பிட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிக் கேட்டும் பதிலேதும் சொல்லாததாலேயே இங்கு குறிப்பிடும் சங்கடம் நேர்ந்தது.. இது எனக்கு மிக மிக வருத்தமளிக்கிறது.
இதைக் குறிப்பிடுவதன் நோக்கம், இம்மாதிரியான செயல்களைத் தடுப்பதற்கே. இம்மாதிரியான செயல்கள் நிறுத்தப்படுமாயின் மகிழ்வடைவேன்....
KANNANAI NINAI MANAME!... PART 37...கண்ணனை நினை மனமே.. பகுதி 37. ப்ருது சரித்திரம். (தொடர்ச்சி..).
ப்ருது சக்கரவர்த்தி, மேடு பள்ளமாக இருந்த பூமியை சமப்படுத்தி, புரங்கள், பட்டினங்கள், வயல்கள், மலை வாசஸ்தலங்கள் என்றெல்லாம் தனித்தனியாக அமைத்தார். அதற்கு முன்பாக இது போன்று இருந்ததில்லை என்கிறது ஸ்ரீமத் பாகவதம்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)