அரசனான சத்ய விரதரை, அவரது பக்தியினாலும், பற்றற்ற தன்மையினாலும், 'முனிவர்' என்றே குறிப்பிடுகிறார் பட்டத்திரி.
குளத்திலும், பின்பு ஏரியிலும் விடப்பட்ட மீன், அதை அடைத்துக் கொண்டு, மிகப் பெரும் உருவம் தாங்கி வளர்ந்தது என்று பார்த்தோம். பின் அது சமுத்திரத்தில் சேர்க்கப்பட்டது. பட்டத்திரி, முனிவரான சத்யவிரதர், மீனாகத் தோன்றியது பகவானே என்றறிந்திருந்தபடியால், பகவானின் கட்டளைப்படியே, தம்முடைய யோக மகிமையினால் அந்த மீனை, கடலுக்குக் கொண்டு சென்றார் என்று சொல்கிறார்.

