கோகுலத்தில் நந்த பாலனுக்கு நாமகரணம் ஆகி விட்டது!!. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, கண்ணனும் பலராமனும் வளர்ந்து வந்தார்கள்!.. குட்டிக் கண்ணன், தவழத் தொடங்கி விட்டான்!!. வெகு வேகமாக அவன் தவழ்ந்து விளையாடும் அழகே அழகு!!. தவழும் போது ஒலிக்கும் தன் கால் கொலுசுகளின் ஒலியைக் கேட்க விரும்பி, இன்னும் வேகமாக, நன்றாகத் தவழ்ந்து விளையாடுவான்!..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
செவ்வாய், 30 ஏப்ரல், 2019
KANNANAI NINAI MANAME.....BAGAM IRANDU... PART..41...கண்ணனை நினை மனமே!!.. பகுதி.41.ஸ்ரீகிருஷ்ணனுக்கு நாமகரணம்!.
குழந்தை பிறந்து நாட்கள் பல கடந்தும், நந்தபாலனுக்கு நாமகரணம் செய்வதற்கான சமயம் வாய்க்கவில்லை.. வசுதேவரின் முதல் மனைவி ரோகிணி, நந்தகோபரின் இல்லத்திலேயே பாதுகாக்கப்பட்டு வந்த சமயம் அது!.தேவகியின் வயிற்றிலிருந்த ஏழாவது கர்ப்பம், யோகமாயையால் ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப் பெற்று, ரோகிணியும் ஒரு புதல்வனை ஈன்றிருந்தாள்!..வாசுதேவனுக்கு மூத்தவனான அக்குழந்தையும் நந்தகோபரின் இல்லத்திலேயே வளர்ந்து வந்தான்!..
திங்கள், 1 ஏப்ரல், 2019
KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 40..கண்ணனை நினை மனமே!!.. பகுதி.40. த்ருணாவர்த்தன் வதம்!.

கோகுலத்தில் நந்த பாலன் ஆனந்தமாக தன் கரங்களையும் கால்களையும் உதைத்து விளையாடி, தன் அழகிய வதனத்தின் காந்தியால், பெற்றோரையும் மற்றோரையும் மகிழ்வித்து வந்தான்!.. ஆனாலும் அனைவரது மனங்களிலும் ஏதோ இனம் புரியாத பயம் குடி கொண்டிருந்தது. நந்தகுமாரனோ எல்லாம் அறிந்திருந்தும் ஏதும் அறியாத குழந்தையாக விளையாடி மகிழ்ந்திருந்தான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)