நட்பாகத் தொடர்பவர்கள்

திங்கள், 1 டிசம்பர், 2014

KANNANAI NINAI MANAME!!.. PART 4...கண்ணனை நினை மனமே!.. பகுதி; 4..


குருவாயூரப்பனின் திருமேனியழகை தொடர்ந்து தியானிக்கிறார் பட்டத்திரி!


"நீர் கொண்ட மேகம் போல் கறுத்தும் அழகாகவும்காயாம்பூவைப் போல் மனதிற்கு இனிமையானதாகவும்எல்லையற்ற அழகுடையதாகவும்லக்ஷ்மீ தேவியின் லீலா நிலயமாகவும்தியானிப்பவர்களின் மனதில் அமுதத்தை பெருக்குவதாகவும் உள்ள உமது திருமேனியை இடையறாது தியானிக்கிறேன்.."

(தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத்திரு மாதுவாழ்
வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய்
ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம்
ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே (குலசேகரப் பெருமான்)).

"ஜீவர்களுக்கு துக்கத்தை விளைவிக்கும் சிருஷ்டி காரியம்கொடுமையானது என்றே நான் எண்ணியிருந்தேன்!.. ஆனால்இவ்விதம் நீர் (உலகங்கள் முதலான அனைத்தையும்) சிருஷ்டிக்காவிட்டால்பரமானந்தம் தரும் உமது மதுரமான திருமேனியைகண்களால் தரிசித்தும்காதுகளினால் உம்மைப் போற்றும் துதிகளைக் கேட்டும் ஆனந்தக் கடலில் மூழ்குவது எப்படி?."

"வணங்குபவர்களின் முன் எப்போதும் நீர் இருக்கிறீர்!.. 'இன்னது வேண்டும்என்று கேட்கத் தெரியாதவர்களுடைய மனதிலிருக்கும் விருப்பங்களை அளிப்பதும்,பேரானந்தம் நிறைந்த மோட்சத்தை அளிப்பவரும் நீரே!.. இவ்விதம்எளிதாக அடையக் கூடியவராக நீர் இருந்தும்மானிடர்கள்தேவலோகத்தில் இருக்கும் கற்பக விருட்சத்தையே விரும்புகின்றனரே!.." என்று உரைக்கின்றார் பட்டத்திரி. 

இங்கு, 'கற்பக மரம்என்று சொல்லியிருப்பது ஆழ்ந்து நோக்கத் தக்கது. வேண்டுவனவற்றையெல்லாம் தருவது கற்பக மரம்.. அது போல்மானிடர்களும், 'இது வேண்டும்அது வேண்டும்என்று வீணில் அழியும் தன்மையுடையவற்றையே இறைவனிடம் வேண்டுகின்றனர். அழியாத பேரின்பமாகிய மோட்சத்தை வேண்டுபவர் யார்?!..பரமானந்த ரூபத்தை உடைய பகவானிடத்தில்அவனையே அல்லவா கேட்க வேண்டும்?!.. அதை விடுத்துஉலக இச்சைகளிலேயே உழல்வதைஇச்சொல்லினால் குறித்தார்.

மானிடர்களின் மனம்இவ்வாறெல்லாம் சென்றாலும்கண்ணனின் கருணையல்லவோ அனைவரையும் காக்கிறது... 'ஹே க்ருஷ்ணாகருணா ஸிந்தோ!'என்று கண்ணீர் மல்கத் துதிக்கிறார் பட்டத்திரி நூறாவது தசகத்தில்!!!!!.. சேங்காலிபுராத்தாரோ 'ஸரஸிஜம் கருணா ஸமுத்ரம்என்று போற்றுகின்றார். அத்தகைய கருணையல்லவாஎத்தனை பிறவி எடுத்தாலும்எத்தனை தவறுகள் செய்தாலும் ஆன்மாக்களின் மேல் பெருங்கருணை கொண்டுஅவற்றை மன்னித்துக் கரையேற்றுகிறது?!..பட்டத்திரி குருவாயூரப்பனின் கருணையை வியந்து போற்றுவதைப் பாருங்கள்!..

காருண்யாத்காமமன்யம்ʼ த³த³தி க²லு பரே ஸ்வாத்மத³ஸ்த்வம்ʼ விஸே²ஷா
தை³ஸ்²வர்யாதீ³ஸ²தே(அ)ந்யே ஜக³தி பரஜனே ஸ்வாத்மனோ(அ)பீஸ்²வரஸ்த்வம் | 
த்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத³மது⁴ரே சேதனா​: ஸ்பீ²தபா⁴க்³யாஸ்
த்வம்ʼ சா(அ)(அ)த்மாராம் ஏவேத்யதுலகு³ணக³ணாதா⁴ர ஸௌ²ரே நமஸ்தே ||

மற்ற தெய்வங்கள்கருணையால் மற்ற பொருட்களைத் தருகின்றார்கள்.. நீரோ, (உமது பெருங்கருணையால்) ஆத்மாவையே (உம்மையே) கொடுக்கின்றீர்!!!!...பிற தெய்வங்கள்ஐஸ்வர்யத்தையும்அணிமா முதலான சித்திகளையும் கொண்டுதங்கள் ஈஸ்வர(இறை)த் தன்மையை விளக்குகின்றனர்!.. ஆனால்நீரோஆத்மாவையே வென்றுஆள்கின்றீர்!.. புண்ணியம் செய்தவர்கள்உம்மை நாடி வருகையில்அடி தோறும் உத்தம ஆனந்தத்தை உம்மிடமிருந்து அடைகிறார்கள்.. ஆனால் நீரோ,பிறரிடம் எதுவும் எதிர்பாராத 'ஆத்மாராமர்'!..ஆனந்த ரூபன் நீர்!.. இப்படி நிகரில்லாத கல்யாண குணங்களுக்கு உறைவிடமான உமக்கு நமஸ்காரம்!)...
(செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,
அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. (நம்மாழ்வார்)).

"பற்றில்லாத, பகவத் சப்தத்திற்கு உறைவிடமாக விளங்குகின்ற ஞான ஸ்வரூபி நீர்!...உமது கீர்த்தி, ஆசையற்றவர்களாலும் பாடப்பட்டிருக்கிறதென்றால், உமது கீர்த்தியின் மகிமையை என்னவென்று சொல்ல‌?!.." என்றெல்லாம் பாடித் துதிக்கிறார் பட்டத்திரி!..

முதல் தசகம் நிறைந்தது!.. ஒவ்வொரு தசக நிறைவிலும், 'நாராயணநாராயணஎன்று பன்னிரு முறைகள் கைகளைத் தட்டிக் கொண்டு சொல்லிஅதன் பின் அடுத்த தசகம் துவங்குவது வழக்கம். இவ்வாறு சொல்லும் போதுநம் பாவங்கள் பறந்தோடுகின்றன என்பது ஸ்ரீராமகிருஷ்ணர பரமஹம்சர் முதலான மகான்களின் கூற்று!.

தொடர்ந்து தியானிக்கலாம்!..

வெற்றி பெறுவோம்!!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

 1. ஒருமுறைக்கிருமுறை படித்து இன்புறமுடிகிறது. அன்புடன்

  பதிலளிநீக்கு
 2. ஆத்மா ராமனாக இருக்கிறீர்கள். அழகான வர்ணனை. கேட்கத் தெரியாதவனுக்கும் மனதிலுள்ளதை நிறைவேற்றும் கடவுள் நீரே. மனதில்ப் பதிந்து போகிரது. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ஆழ்ந்த தெய்வ பக்தி, தங்கள் எழுத்துக்களைப் படிப்பவர்களுக்கும் ஏற்படுகின்றது.. பேறு பெற்றோம்!.. நன்றி அம்மா!!..

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..