இதுவரை, தம் உள்ளத்தில் நிலையான பக்தியை அருளுமாறு வேண்டிய பட்டத்திரி, யோக மார்க்கத்தின் மூலம், பகவானை அடையும் விதம் பற்றி, இந்த தசகத்தில் சொல்கிறார்!..
"குருவாயூரப்பா, உன்னை உபாசிப்பத்தற்கு வேண்டிய உடல் நலத்தைக் கொடுத்தருளப் பிரார்த்திக்கிறேன்.. அவ்விதம் அருளினால், அஷ்டாங்க யோகம் செய்து, விரைவில் உன்னருள் பெறுவோம்!" (அஷ்டாங்க யோகம் செய்வதற்கு, உடல் ஆரோக்கியம் இன்றியமையாதது என்பது, இதன் மூலம் புலனாகிறது).
யோகத்தின் எட்டு அங்கங்கள் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி நிலை ஆகியவை.. இவை குறித்து, கூறத் துவங்குகின்றார் பட்டத்திரி.
ப்³ரஹ்மcஅர்யத்³ருட⁴தாதி³பி⁴ர்யமைராப்லவாதி³னியமைஸ்²cஅ பாவிதா:|
குர்மஹே த்³ருட⁴மமீ ஸுகா²ஸனம்ʼ பங்கஜாத்³யமபி வா ப⁴வத்பரா: ||
("திடமான பிரம்மச்சரியம் அனுஷ்டித்தல் முதலிய இயமங்களாலும், நீராடுதல் முதலிய நியமங்களாலும் உள்ளும் புறமும் சுத்தமாகி, பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமருதல் ஆகியவற்றை நன்கு செய்வோம்!!.." ).
மேலும் தொடருகிறார்!!..
"ஸ்ரீ அப்பனே!.. இடைவிடாது, பிரணவத்தை மனதால் தியானித்து, பிராணாயாமம் செய்து எங்களை பரிசுத்தமானவர்களாக மாற்றிக் கொண்டு, இந்திரியங்களை அவற்றுக்கான விஷயங்களிலிருந்து திசை திருப்பி, உமது உபாசனையில் ஈடுபடுவோம்!!".
(மறம்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும்
துறந்துநின்க ணாசையேதொ டர்ந்துநின்ற நாயினேன்
பிறந்திறந்து பேரிடர்ச்சு ழிக்கணின்று நீங்குமா
மறந்திடாது மற்றெனெக்கு மாயநல்க வெண்டுமே. (திருமழிசை ஆழ்வார்))…
"குருவாயூரப்பா, நின் திருவுரு இன்னதென்று எங்கள் மனதில் தெளிவுற விளங்காத பொழுது, முயற்சி செய்து, மனதை ஒருநிலைப்படுத்தியவாறிருப்போம்.. இவ்விதம் செய்வதன் மூலம் உம் திருவடிகளைத் தியானிக்கும் பேறடைந்து, பக்திரசத்தை அனுபவித்து, உள்ளம் நெகிழுவோம்!"
(உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை. (திருமழிசை ஆழ்வார்)).
"இவ்வாறு, ஆழ்ந்த தியானயோகத்தில் நீண்ட காலம் தொடர்ந்து ஈடுபடுவதால், மிகவும் தெளிவாக, உம் வெவ்வேறு அங்கங்களின் அழகை அனுபவித்து, உம் திருமேனியை கஷ்டமேதுமின்றி தியானித்துக் கொண்டே இருப்போம்!!..".
நன்றிருந்து யோகநீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்றிருந்து தீவினைகள் தீர்த்ததேவ தேவனே
குன்றிருந்த மாடநீடு பாடகத்து மூரகத்தும்
நின்றிருந்து வெஃகணைக்கி டந்ததென்ன நீர்மையே. (திருமழிசை ஆழ்வார்)..
(தொடர்ந்து தியானிப்போம்!).
வெற்றி பெறுவோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
அருமையாய் நாராயணீயப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அம்மா!..
நீக்குமுடிந்தபோது வந்து வாசித்துப் பயனடைகிறேன். நல்ல பதிவுகள். அன்புடன்
பதிலளிநீக்குதங்கள் அன்புக்கும் ஆசிக்கும் என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்!.. அவசியம் வாருங்கள்!..
நீக்குஉங்களுடைய இப்பதிவினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். தங்கள் தகவலுக்காக!
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2014/12/blog-post_31.html
நட்புடன்
ஆதி வெங்கட்
வலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி!...இது, நான் மேன்மேலும் எழுத மிகுந்த ஊக்கமளிப்பதாக இருக்கிறது...
நீக்கு