இந்த தசகத்தில், பக்தனின் இலக்கணம், அவன் எவ்வாறிருக்க வேண்டும் என்று பட்டத்திரி கூறுவதைப் பார்க்கலாமா?..
"ஹே வரதா!.. உம்முடைய திருநாமங்களைக் கீர்த்தனம் செய்து கொண்டும், உம்மை தியானம் செய்து ஆனந்த சாகரத்தில் மூழ்கி, உமது கல்யாண குணங்களையும் , அவற்றைக் கூறும் கதைகளையும் ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டும் இருக்கும் உமது அடியார்கள், உம்மிடம் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். அத்தகைய உமது பக்தர்கள், மிகுந்த பாக்கியசாலிகள் என்றே நான் கருதுகிறேன்..".
காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய்
ஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை
சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால்
வாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே..
(குலசேகராழ்வார்).
க³த³க்லிஷ்டம்ʼ கஷ்டம்ʼ தவ சரணஸேவாரஸப⁴ரே(அ)
ப்யனாஸக்தம்ʼ சித்தம்ʼ ப⁴வதி ப³த விஷ்ணோ குரு த³யாம் |
ப⁴வத்பாதா³ம்போ⁴ஜஸ்மரணரஸிகோ நாமனிவஹா
நஹம்ʼ கா³யங்கா³யம்ʼ குஹசன விவத்ஸ்யாமி விஜனே ||
("ஹே குருவாயூரப்பா!.. நோயினால் கஷ்டப்படுவதால், என் மனம், உமது திருவடிகளை வணங்குவதில் உண்டாகும் ஆனந்தத்தில் கூட ஈடுபடாமல் இருக்கிறது..இது பெரிய கஷ்டம் அன்றோ!!.. எனக்கு அருள் புரிவாயாக!.. நான் உம்முடைய திருநாமங்களை திரும்ப திரும்பக் கூறிக் கொண்டும், உன் திருவடித் தாமரைகளைத் தியானித்துக் கொண்டும் தனியான ஓர் இடத்தில் வசிக்க விரும்புகிறேன்!.."(இங்கு பட்டத்திரி, 'நோய்' என்று கூறுவது, அவரது நோயை மட்டுமல்ல.. முன்வினையாகிய பிணியையும், அதன் காரணமாக விளைந்த பிறவி என்னும் பெருநோயையுமே!).
"உம் க்ருபை இருக்குமெனில், மனிதர்களால் அடைய முடியாதது என்ன?..என்னுடைய துன்பக் குவியலை நீக்குவது உமக்கு மிகவும் சுலபமான காரியமே!...இந்த உலகத்தில், (உமது) எத்தனையோ பக்தர்கள், எப்பொழுதும் துன்பமில்லாமல், பற்றற்று முக்தர்களாக, இன்பமாக இருக்கிறார்களே!!!"
(தொடர்ந்து பிரார்த்திப்போம்).
வெற்றி பெறுவோம்!..
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்...
எவ்வெப்போதும் உன் நாமத்தையே தியானிக்கும்படியான சக்தியை எனக்குக் கொடு. இதைவிட வேறு என்ன வேண்டும். அருமை. அன்புடன்
பதிலளிநீக்குஆம் அம்மா!.. அதுவே நம் பிரார்த்தனை!..மிக்க நன்றி!..
நீக்குகடவுளே உன் திருநாமங்களை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதற்கு அருள் புரி. காரியத்தில் கொண்டுவருவோமானால் அதற்கீடு இணையே இல்லை. அன்புடன்
பதிலளிநீக்குதாங்கள் சொல்வது போல், நாம ஸ்மரணையை காரியத்தில் கொண்டு வர, பகவான் அனுக்கிரகம் செய்ய வேண்டுவோம்!... மிக்க நன்றி!.
நீக்கு