நட்பாகத் தொடர்பவர்கள்

புதன், 21 ஜூன், 2017

KANNANAI NINAI MANAME.. IRADAM BAGAM.. PART 14..கண்ணனை நினை மனமே.. பகுதி 14. வாமனாவதாரம்!!!.Image result for vamanavataram images

பகவான், புண்ணியம் மிகுந்த அந்த ஆசிரமத்தில் அவதரித்ததும், தேவர்கள், ஆனந்தத்துடன் வாத்தியங்களை முழக்கினார்கள்!.. பூமாரி பொழிந்தார்கள்!.. காசியபரும், அதிதி தேவியும், ஜய கோஷம் செய்தார்கள்!.. இவ்விதம் இருக்க, பகவான், நொடியில், பிரம்மச்சாரியின் உருவத்தை எடுத்துக் கொண்டார்!!!!!..

KANNANAI NINAI MANAME.. IRANDAM BAGAM..PART 13.. கண்ணனை நினை மனமே.. பகுதி 13. வாமனாவதாரம்!!!.

Image result for vamanavataram images

அடுத்ததாக, வாமனாவதாரத்தைச் சொல்லத் துவங்கும் பட்டத்திரி, முதலில், பலியின் சரிதத்தைச் சொல்கிறார். எவ்வாறு அவன் பலம் மிகுந்தவனாக, அனைத்துலகத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டான் என்றும் சொல்கிறார்.

செவ்வாய், 23 மே, 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM.. PART.12..கண்ணனை நினை மனமே.. பகுதி 12..அமுதம் வழங்கிய ஆரா அமுதன் ( மோஹினி அவதாரம்!).


Related image
மோஹினியின் உருவின் இருந்த பகவான், தன் பக்தர்களிடம் பேரன்பு பூண்டவராதலால், தேவர்களின் வரிசையிலேயே அமுதத்தை பரிமாறிக் கொண்டிருக்கும் போது, இதை உணர்ந்த ஸ்வர்ப்பானு என்ற அசுரன், தேவனைப் போல் உருவெடுத்து, தேவர்களின் வரிசையில் அமர்ந்து, அமுதத்தைப் பெற்றான். அமுதத்தைப் பாதி குடித்திருந்த நிலையில், பகவான், தன் சுய உருவில் தோன்றி, அவன் சிரத்தை, தன் சக்கரத்தால் துண்டித்தார்.

ஞாயிறு, 21 மே, 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM..PART 11..கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்...பகுதி 11... மோஹினி அவதாரம்..!

Image result for mohini avatar

தன்வந்திரியாகத் தோன்றிய‌   பகவானிடமிருந்த அம்ருத கலசத்தை, அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இதைக் கண்டு கலங்கிய தேவர்களை பகவான் சமாதானம் செய்தார். உடனே அங்கிருந்து  மறைந்தார்!!..

அங்கே திடீரென்று சியாமள வர்ணமுடைய, இளமையான, அழகே உருவெடுத்து வந்தது போன்ற தோற்றமுடைய பெண்ணொருத்தி தோன்றினாள்!..பேரழகு வாய்ந்த அவளைக் கண்ட அசுரர்கள், மோகத்தால் மதியிழந்து, அவளை நோக்கி வந்தார்கள்!..

திங்கள், 17 ஏப்ரல், 2017

KANNANAI NINAI MANAME..IRANDAM BAGAM ..PART 10.கண்ணனை நினை மனமே!..இரண்டாம் பாகம்.. பகுதி 10.

Image result for God dhanvantari


இன்னின்ன செயல்களைச் செய்தால், திருமகள் நிலைத்திருப்பாள் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. சோம்பலகற்றி சுறுசுறுப்புடன் செயல்படுபவர்கள், நல்லதையே நினைத்து, நன்மையையே செய்பவர்கள் தூய்மையான, அழகு நிரம்பிய பொருட்கள்,   , இன்னும்..இன்னும்.. சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் நீளும்.