நட்பாகத் தொடர்பவர்கள்

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

SRI GANESHA CHARANAM....ஸ்ரீ கணேச சரணம்!..


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

நாளை 29/8/2014 விநாயக சதுர்த்தி..ஸ்ரீவிநாயகரைப் பற்றியும், விநாயக சதுர்த்தி பூஜை பற்றியும் இங்கு பதிவிட்டிருக்கும் முந்தைய பதிவுகளுக்கு கீழே சொடுக்குங்கள்.
இங்கு கர்நாடகாவில் இதுவே பெரிய பண்டிகை.. தீபாவளி கூட சிறப்பாகக் கொண்டாடமாட்டார்கள்..


இதைத்தான், 'கௌரி கணேஷா' என்று சிறப்பிக்கிறார்கள். ஊரெல்லாம் விழாக்கோலமாக இருக்கிறது!..

இன்று 'கௌரி பண்டிகை' என்று கௌரி பூஜை செய்கிறார்கள். நாளை விநாயகருக்குப் பூஜை.. புதுத் துணிமணிகள் எடுப்பது, சகோதரிகளுக்கு ஒரு முறத்தின் மேல் மங்கலப் பொருட்கள் வைத்து, மற்றொறு முறத்தால் மூடி சீர் வழங்குவது என்று விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

இங்கே ரொம்பவே என்னைக் கவர்ந்தது, கடையிலிருந்து, கௌரி, விநாயகர் பிரதிமைகளை வீட்டுக்கு கொண்டு வரும் சம்பிரதாயம் தான்.

ஒரு பெரிய தாம்பாளத்தில் மஞ்சள் பூசி, அதன் மேல் அரிசி, பருப்பு, அருகம்புல், வேப்பிலை வைத்து, கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள். பிரதிமைகளை வாங்கி, தட்டில் வைத்து, பிரதிமைகளை பெரிய துணியால் மூடி, வீட்டுக்குக் கொண்டு வருகிறார்கள்!!!!!.. வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து, வீட்டுக்குள் கொண்டு வந்து, பூஜை அறையில் வைத்து, பின்னர் துணியை எடுக்கிறார்கள்.

பெரிய கரும்பு, சோளம், பலவகை தானியங்கள், பழங்கள் என்று ஒன்று விடாமல் படைக்கிறார்கள்..சமைத்த உணவை, இலை போட்டு, படையல் போடுவதும் உண்டு.. இங்கும் கொழுக்கட்டை, போளி முதலானவை தான் பிரதான நிவேதனம். 

தமிழகத்திலும், ஏன் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை இது!.. பிள்ளையார் ஊர்வலங்கள் இனி ஒரு மாதம் வரை அமர்க்களமாக நடைபெறும்!

விலைவாசி ஏற்றத்தால், பண்டிகை கொண்டாடும் உற்சாகம் தற்போது குறைந்து வருவது கண்கூடு!.. கடைத்தெருவில் இன்று இந்த மாதிரி பேச்சுக்கள் தான் அதிகம் கேட்க முடிந்தது..இருப்பினும் என் அபிப்பிராயத்தில், விநாயகருக்கு எது  முடிகிறதோ, எது கிடைக்கிறதோ அதை வைத்து, மனதார பூஜித்தால் போதும்!.. எல்லாம் அவன் செயல் என்பதால் இதுவும் அவன் சித்தமே என்று மனமார ஏற்றுக் கொண்டு, உளமார்ந்த அன்புடன் பூஜை செய்து, ஸ்ரீவிநாயக புராணம், விநாயகர் துதிகளைச் சொல்லி வணங்குங்கள். வேழ முகத்தான் வேண்டுவன எல்லாம் தருவான்!.

ஸ்ரீ விநாயகரின் அருள் மழை நம் அனைவர் மீதும் பொழியப் பிரார்த்திக்கிறேன்!

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

 1. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
 2. விநாயகர் சதுர்த்தித் திருநாள் நல்வாழ்த்துகள், பார்வதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க! வாங்க!... கவிநயா!.... வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி!

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..