நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 25 ஜூலை, 2017

KANNANAI NINAI MANAME... IRANDAM BAGAM..PART 15..கண்ணனை நினை மனமே.. பகுதி 15. வாமனாவதாரம்!...மூன்றடி மண்!..!..


Image result for lord trivikrama
பகவானை யாரென்று அறியாமலே, வரவேற்று பூஜித்த பலி, பின்னர் கரங்களைக் கூப்பிக் கொண்டு, 'அந்தண குமாரா!, என்னிடமிருந்து நீ வேண்டுவது யாதாயினும் கூறு.. அன்னமோ, வீடோ, பூமியோ, எதுவானாலும், அனைத்தையுமே நீ கேட்டாலும், நான் உனக்குத் தருவேன்!!' என்று கூறினான்.
பகவான் இதைக் கேட்டு, கருணை மிகக் கொண்டார். பலியின் கர்வத்தை அடக்க விரும்பினார். ஆதலால், அசுர குலத்தை சற்று நேரம் புகழ்ந்து விட்டு, பின், தன் காலடியால் மூன்றடி மண் வேண்டுமென யாசித்தார்.

ஆணவம் ஆட்டிப் படைத்தது பலியை.. எதிரே பகவான் நின்றிருந்த போதிலும்!!!...'உலகிற்கே அதிபதி நான்!. என்னிடம் ஏன் மூன்றடி  மண்ணையே யாசிக்கிறாய்?!..கேள் பாலகா!.. பூமி முழுவதையும் நீ கேட்டாலும் தருவேன்!!' என்றான் பலி!.

'மூன்றடி மண்ணால் திருப்தி அடையாதவன், மூன்று உலகங்களைத் தந்தாலும் திருப்தி அடைய மாட்டான்!' என்றார் பகவான். அதைக் கேட்ட பலி, பகவான் கேட்டவாறே  தருவதற்கு  ஒப்புக் கொண்டு,  நீர் வார்த்து தானம் செய்ய முற்பட்ட பொழுது, அசுர குருவான சுக்ராச்சாரியார் அவனைத் தடுத்து,' வேண்டாம், தராதே, உன்னிடமிருந்து அனைத்தையும் அபகரிக்கும் எண்ணத்துடன் வந்துள்ள ஸ்ரீவிஷ்ணுவே இவர்!!' என்றார்.

அதைக் கேட்டும் பலிச் சக்கரவர்த்தி மனம் கலங்கவில்லை!!!!..'அப்படியாயின், என்னிடம் பகவானே யாசிக்க வந்துள்ளார்!.. அவருக்கு தானம் அளித்தால், நான் என்னுடைய ஆசைகள் பூர்த்தி எய்தியவனாவேன்!. நான் கொடுக்கத் தான் போகிறேன்!!. என்று உறுதியாகச் சொல்லிவிட்டான்.

அசுர குரு, , 'அனைத்தையும் இழப்பாய்!' என்று  சபித்த பொழுதும் பலி, மனம் தளராமல், தன் மனைவி விந்த்யாவளி நீர் அர்ப்பிக்க, பகவான் கேட்டவாறே தானம் செய்தான்!!!..

தேவர்களும் ரிஷிகளும் அந்த வேளையில் பூ மழை பொழிந்தனர்!!!.. பகவானுடைய வாமன ரூபம், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பிரம்மாண்டத்தின் எல்லை வரையிலும் மேலும் மேலும் வளர்ந்த வண்ணம் இருந்தது!!!..

​ ( நிஸ்ஸந்தே³ஹம்ʼ தி³திகுலபதௌ த்வய்யஸே²ஷார்பணம்ʼ தத்³
வ்யாதன்வானே முமுசுர்ருʼஷய​: ஸாமரா​: புஷ்பவர்ஷம் |
தி³வ்யம்ʼ ரூபம்ʼ தவ ச ததி³³ம்ʼ பச்ய‌தாம்ʼ விச்வபாஜா
முச்சைருச்சைரவ்ருʼதத³தீக்ருʼத்ய விஸ்வாண்ட³பாண்ட³ம் ||
​ 
( ஸ்ரீமந் நாராயணீயம்)
​ ).

காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக் கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறல் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த தேவ பிராற்கென் நிரைவினோடு, நாண்கொடுத்
தேனினி யென்கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.

என்ற நம்மாழ்வாரின் திருமொழிகளை, இங்கு பொருத்தி தியானிக்கலாம்!..

(தொடர்ந்து தியானிப்போம்!).

வெற்றி பெறுவோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, அதீதம் மின்னிதழில், தொடராக வெளிவருகிறது!!.

2 கருத்துகள்:

  1. அருமையான மிக அழகான கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

    தினமும் இரவு நான் தூங்கும் முன்பு, இந்த வாமனாவதார முழுக்கதையை ஒருமுறையும், மற்ற ஸ்ரீமத் பாகவதக்கதைகளில் ஏதாவது தினமும் ஒன்று வீதமும், ப்ரும்மஸ்ரீ நொச்சூர் வெங்கடராமன் அவர்கள் சொல்லக் கேட்டு மகிழ்ந்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..