நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

தினந்தோறும்



தினந்தோறும் நாம் செய்ய வேண்டிய, செய்யக் கூடிய சில சம்பிரதாயங்களை இங்கே கொடுத்துள்ளேன். பெரும்பாலானவை நம்மில் அநேகம் பேரால் கடைபிடிக்கப்படுபவையே.

1. காலையில் எழுந்ததும்,மனதுக்குப் பிடித்த கடவுளை சில நிமிடம் நினைக்கவேண்டும். இருகரங்களையும் சேர்த்துப் பார்த்து,கர தரிசன ஸ்லோகம் சொல்லலாம்.இதன் காரணம், காலையில் எந்த மனநிலையில் இருக்கிறோமோ அதுவே அன்று முழுவதும் நாம் செய்யும் வேலைகளில் பிரதிபலிக்கும். இது ஒரு ரிலாக்சேஷன் டெக்னிக்.

2.சீக்கிரமே காலைக்கடன்களை முடித்துவிட்டு,குளித்து விடவேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் குளிப்பது தேவக்குளியல், 6 மணிக்குள் குளிப்பது மனிதக் குளிய‌ல்,அத‌ற்கு மேல்குளிப்ப‌து அசுர‌க்குளிய‌ல் என்ப‌து சாஸ்திர‌ம்.

3. விள‌க்கேற்றிவிட்டுத்தான் வேலைக‌ளைத்தொட‌ங்க‌வேண்டும்.

4. அடுக்குமாடி வீடானாலும் வாச‌லைத்துடைத்து ஒரு சின்ன‌க் கோல‌மாவ‌து போட‌வேண்டும். ஸ்டிக்க‌ர் கோல‌ம் த‌விர்ப்ப‌து சிற‌ப்பு.

5. சர்க்க‌ரை போட்ட‌ பால், ஏதாவது ஒரு வகைப் பழம்,ஒரு கைப்பிடி சாத‌ம்,( நெய், ப‌ருப்பு க‌ல‌ந்த‌து) என்று ஏதேனும் நிவேத‌ன‌ம் செய்ய‌வேண்டும்

6. நிவேதனம் செய்த அன்னத்தை காக்கைக்குப் போடவேண்டும். இது பித்ரு தோஷம் வராதிருக்க உதவும். இவ்வாறு செய்ய முடியாத வீடுகளில்,பிரட் அல்லது சிறு தானியங்கள் (நெல்.கோதுமை போன்றவை)பறவைகளுக்குக் கொடுக்கலாம்.

7. காலை,மாலை இரு வேளையும் குறித்த நேரத்தில் விளக்கேற்றப் பழக வேண்டும்.

8. வெள்ளிக்கிழமைகளிலும், ப‌ண்டிகை நாட்க‌ளிலும் பூஜை அறையைச் சுத்த‌ம் செய்து, விளக்கேற்ற‌ வேண்டும்.

9. விள‌க்குக‌ள் சுத்த‌ம் செய்ய‌ வியாழக்கிழ‌மை உக‌ந்த‌து.

10. விள‌க்கேற்றிய‌ பின் சிறு ம‌ணை அல்ல‌து பாய் எடுத்து விளக்கிற்கு முன் அல்ல‌து ஹாலில் ஒரு குறிப்பிட்ட‌ சுத்த‌மான‌ இட‌த்தில் தின‌மும் போட‌ வேண்டும். வ‌ருகிற‌ ல‌க்ஷ்மியை வ‌ர‌வேற்று ஆச‌ன‌ம் அளிப்ப‌தாக‌ ஐதீக‌ம்.சிறிது நேர‌த்தில் அக‌ற்றி விட‌லாம்.

11. இர‌வு ப‌டுக்கும் முன் இறைவ‌னை வழிப‌ட்டு,பின் உற‌ங்க‌ வேண்டும்.
                                              
                                                 


வெற்றி பெறுவோம்!

3 கருத்துகள்:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..